For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழப்பத்தில் த.மா.கா.

By Staff
Google Oneindia Tamil News

Jeyalallithaaவிழா மேடைகளெல்லாம் தற்பொழுது அரசியல் மேடைகளாகிக் கொண்டிருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்புஅ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சேர்ந்து செயல்பட ஆரம்பித்த த.மா.கா. தற்பொழுது இக்கட்டான நிலையில்இருக்கிறது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவைதானா? அல்லது மறுபடியும் தி.மு.க.வுக்கே சென்று விடலாமா? என்றுஇப்பொழுது யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் த.மா.கா தலைவர்கள்.

இந்த யோசிப்பிற்கும், த.மா.காவின் தர்மசங்கடமான சூழ்நிலைக்கும் காரணமாக அமைந்தது புதன்கிழமைசென்னையில் நடந்த ஈ.வெ.கே. சம்பத்தின் நாடாளுமன்ற சொற்பொழிவு தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா.விழாவில் ஜெயலலிதா நூல்வெளியிட த.மா.கா தலைவர் மூப்பனார் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடு. திட்டமிட்டபடி விழாவும் நடந்தது. நூல் வெளியீட்டு விழா முடிந்து ஜெயலலிதா மேடையில் பேசிய பேச்சுக்கள் த.மா.கா.வில்புயலையும் கிளப்பியிருக்கிறது.

விழாவில் , த.மா.கா மட்டுமில்லாமல் மற்ற அ.தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நல்லகண்ணு , மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் வரதராஜன், இந்திய தேசிய லீக்பொதுச் செயலாளர் அப்துல் லத்தீப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நூலை வெளியிட்டு ஜெயலலிதா பேசும் பொழுது இந்த நூலை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியும் பெருமிதமும்அடைகிறேன். திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவராக வாழ்வைத் தொடங்கிய சொல்லின் செல்வர் சம்பத்,தமது ஆற்றலாலும், அறிவுத் திறனாலும் தனிச்சிறப்பு மிக்கவராக விளங்கினார்.

நாடாளுமன்றத்தில் தமிழக நலன் கருதி அவர் எடுத்துரைத்த கருத்துக்கள் இன்றளவும் அவர் அறிவாற்றலைவெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என்று சம்பத் பற்றி பேசியவர் தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு என்றும்எதிரியாக இருப்பவர் கருணாநிதி. எம்.ஜி.ஆரின் ஜென்ம விரோதி. அந்த கருணாநிதியைத்தான் சம்பத் வாழ்நாள்முழுவதும் எதிரியாக கருதினார். எந்த நேரத்திலும் அவர் கருணாநிதியிடம் சமரசம் செய்து கொண்டதில்லை. அதேநேரம் எம்.ஜி.ஆரிடம் தனிப்பாசம் வைத்திருந்தார்.

Moopanarகடந்த நாலரை ஆண்டுகளாக நம்மை அழிப்பதற்காக மட்டுமே கருணாநிதி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்திவருகிறார். நம்மைப்பற்றி அவதூறு பரப்புவதே கருணாநிதியின் கொள்கையாக இருந்து வருகிறது. நம்மைஇருட்டில் வீழ்த்த நினைத்தவர்கள் இருண்டு வருகிறார்கள். கோபாலபுரத்தில் இன்று பதவிக்காக குத்து வெட்டுநடக்கிறது.

அதிகாரத்தைப் பிடிப்பது யார், என்பதில் போட்டி போட்டுக் கொண்டு விலகல் அறிக்கைகள் வெளி வருகின்றன.வேடிக்கை நாடகங்கள் தொடர்கின்றன என்று பேசியவர் மேடையில் அமர்ந்திருந்த கூட்டணி கட்சி தலைவர்கள்அதிர்ச்சியடையும் படி பேச ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியை யாரோடும் எப்பொழுதும் பங்கு போட்டுக் கொண்டதில்லை. அதிகாரத்தை யாருடனும்பகிர்ந்து கொண்டதில்லை. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று பேசப்படுகின்ற வார்த்தைகள் கூட்டணிக்குவலிமை சேர்க்காமல் , குழப்பமான நிலையையே உருவாக்கும். தமிழக மக்கள் எப்பொழுதும் கூட்டணி ஆட்சியைவிரும்பியதில்லை.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதை மக்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். கடந்த 80ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸூம், தி.மு.கவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

இந்திராகாந்தியை பிரதமராக முன் மொழிந்து அந்த கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த சில மாதங்களில்நடந்த சட்டசபை தேர்தலில் அதே தி.மு.க வும் காங்கிரஸூம் 50 க்கு 50 என்று சரிபாதியாக இடங்களைப் பகிர்ந்துகொண்டு மக்களைச் சந்தித்தன.

அந்த குழப்பமான சூழ்நிலையை மக்கள் விரும்பவில்லை. கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் வரவேற்கவில்லை.அதனால் காங்கிரஸ் , தி.மு.க கூட்டணி படுதோல்வி அடைந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். தமிழகத்தில்அதே சூழ்நிலைதான் இன்றும் தொடர்கிறது. ஒரு கட்சி ஆட்சியைத்தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.

வலிமையான ஒரு தலைவர் முதல்வராக வர வேண்டும் என்பது தான் மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆட்சியில் பங்கு என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது, கூட்டணிக்கு வலிமைசேர்க்காது என்று தெரிவித்துக் கொண்டு மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்போம் என்று உறுதிபடக்கூறுகிறேன் என்று பேசி முடிக்க அதிர்ந்து போனார்கள் மேடையில் இருந்த த.மா.கா தலைவர்களும் மற்ற கூட்டணிகட்சித் தலைவர்களும்.

ஜெயலலிதா பேசிய ஆவேச பேச்சுக்கு புதன்கிழமை நடந்த கூட்டத்தில் மூப்பனார் எந்த பதிலும் சொல்லவில்லை.ஆனால் கூட்டம் முடிந்த பின்னர், அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர். மிக இறுக்கமாகக்காணப்பட்ட மூப்பனார் பிறகு பதில் சொல்கிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார். இதன் பிறகுத.மா.கா தலைவர்கள் மிகவும் கோபமடைந்தனர்.

நம்மிடம் பேசிய த.மா.கா தலைவர் ஒருவர் ஜெயலலிதாவுடன் கூட்டணி என்று பேச்சு ஆரம்பித்த பொழுதே இந்தமாதிரி ஏதாவது நடக்கும் என்று தெரியும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால்த.மா.காவும், அ.தி.மு.க.வுக்காக உழைக்க வேண்டும். ஆனால் ஜெயித்து விட்டால் அ.தி.மு.க.வினர் மட்டும்அமைச்சர்களாக ஆவார்கள் நாங்கள் மட்டும் அவர்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்க வேண்டுமா? இது என்னநியாயம்?

இத்தனை ஆண்டு காலம் இப்படித்தானே இருந்தோம். இப்பொழுதும் ஆட்சியில் பங்கு கிடையாது என்றுசொன்னால் என்ன அர்த்தம். ஜெயலலிதா மீது எவ்வளவு வழக்குகள்? அ.தி.மு.க.வில் உள்ள முன்னாள்அமைச்சர்கள் அனைவர் மீதும் வழக்குகள் என்று இருந்த பொழுதும் தி.மு .க.வுடன் உறவு நன்றாக இருந்தபொழுதும் பொதுப்பிரச்சனை, எதிர்கால கட்சியின் வளர்ச்சி இவைகளைக் கருதித்தானே அ.தி.மு.க.வுடன்கூட்டணி அமைத்தோம்.

ஆட்சியில் பங்கு என்று நாங்கள் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. ஏதோ எம்.ஜி.ஆர் ஆட்சியையாரோடும் பங்கு போட்டுக் கொள்ள மாட்டாராம். இப்படி நேரடியாக தலைவரை வைத்து திடீரென்று ஜெயலலிதாபேசுவதற்கு முன்பு தலைவரிடம் ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம் என்று கோபத்துடன் பேசினார் அந்தத.மா.கா பிரமுகர்.

பத்திரிக்கையாளர்களிடம் இன்று பதில் சொல்கிறேன் என்று சொன்ன மூப்பனார் இந்தப் பிரச்சனை பற்றிஇப்பொழுது யாரும் வாய்திறக்க வேண்டாம் என்று த.மா.காவில் உள்ள மற்ற பிரமுகர்களிடம்சொல்லியிருக்கிறாராம். இப்பொழுதும் கூட ஒன்றும் பிரச்சனையில்லை மூன்றாவது அணி அமைக்கலாம் அல்லதுமறுபடியும் தி.மு.க.வுடனேயே சேர்ந்துவிடலாம்.

இப்பொழுதே அ.தி.மு.கவில் மரியாதையில்லை. நாளை தேர்தல் முடிந்து அவர்கள் ஆட்சியமைத்து விட்டால்கேட்கவே வேண்டாம் மூப்பனாரா யார் என்று இந்த அம்மா கேட்டாலும் கேட்பார்கள். அவர்களுக்கு சரியானபாடம் புகட்ட வேண்டும் அதுவும் நாம் எடுக்கின்ற தேர்தல் வியூகத்தின் மூலமாக என்று யோசிக்க ஆரம்பித்துஇருக்கிறார்கள் த.மா.கா தலைவர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X