சென்னை திரும்பினார் நக்கீரன் கோபால்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் பேச்சு நடத்திவிட்டு நக்கீரன் கோபால் வியாழக்கிழமைகாலை சென்னை திரும்பினார்.

வியாழக்கிழமை பிற்பகல் அவர் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப்பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச்சென்றான். கடத்தியவர்களை விடுவிக்க 10 கோரிக்கைகளை வீரப்பன்விடுத்திருந்தான்.

இதற்கிடையே, அவனது கோரிக்கையை ஏற்று அரசுத் தூதராக நக்கீரன் கோபால்காட்டுக்குள் சென்று வீரப்பனைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மேலும் 4கோரிக்கைகளைத் தெரிவித்தான் வீரப்பன்.

வீரப்பன் பிடியில் உள்ள ராஜ்குமாரையும் மற்றவர்களையும் சந்தித்துப் பேசிஅவர்களுடன் வீரப்பன் இருப்பது போன்ற புகைப்படங்களுடன் சென்னைதிரும்பினார் நக்கீரன் கோபால்.

வீரப்பன் தெரிவித்த 14 கோரிக்கைகளுக்கான தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின்பதில்களுடன் இரண்டாவது முறையாக வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குள் சென்றார்நக்கீரன் கோபால்.

வீரப்பனிடமிருந்து தகவல் வராததை அடுத்தும், காட்டுப் பகுதியில் பலத்த மழைபெய்ததாலும் வீரப்பனை நக்கீரன் கோபாலால் எளிதில் சந்திக்க முடியவில்லை. நீண்டபோராட்டத்துக்குப் பிறகு இரு நாட்களுக்கு முன் வீரப்பனைச் சந்தித்தார் கோபால்.

வீரப்பனைத் தான் சந்தித்தது குறித்து தகவல்களையும் சில புகைப்படங்களையும்நக்கீரன் அலுவலகத்துக்கு புதன்கிழமை அனுப்பினார் நக்கீரன் கோபால்.

அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை அவர் சென்னை வந்து சேர்ந்தார். வீரப்பன்பிடியில் உள்ள ராஜ்குமார் பாதுகாப்பாகவும், உடல் நலமாகவும் இருப்பதாக அவர்தெரிவித்தார்.

இரண்டாவது முறை காட்டுக்குள் சென்று வீரப்பனிடம் பேசி ராஜ்குமாரையும்மற்றவர்களையும் மீட்க முடியவில்லை. ஆனால், அவன் தெரிவித்திருந்த சிலகோரிக்கைகள் குறித்து அவனிடம் தெளிவாகப் பேசி சம்மதிக்க வைக்க என்னால்முடிந்தது.

காவிரி நீர்ப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற தனதுமுந்தைய கோரிக்கைகள் பற்றி வீரப்பன் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், தமிழக சிறையில் உள்ள 5 தமிழ் தீவிரவாதிகளையும், கர்நாடகச் சிறைகளில்உள்ள 51 தடா கைதிகளையும் விடுவிக்கவேண்டும் என்பதில் அவன் உறுதியாகஇருப்பதாக நக்கீரன் கோபால் தெரிவித்தார்.

வியாழக்கிழமை பிற்பகல் தமிழக முதல்வர் மு. கருணாநிதியைச் சந்தித்து தனதுபயணம் குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+