இனிமேல் தமிழில்தான் கையெழுத்து ... ஜெ. முடிவு
சென்னை:
இனிமேல் தனது கையெழுத்தை தமிழில் போடுவதென ஜெயலலிதா முடிவுசெய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது 1997ம் ஆண்டு முதல் தனி நீதிமன்றங்களில் 6ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இவ்வழக்குகள் தொடர்பாக அவர்சார்பில் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களிலும் "ஜெ.ஜெயலலிதா என்றுஆங்கிலத்திலேயே கையெழுத்துப் போட்டு வந்தார்.
டான்சி வழக்கில் 23.6.2000 அன்று வாக்குமூலம் அளித்தபோது டான்சி நிலத்தை தம்நிறுவனம் வாங்கியது தொடர்பான ஆவணங்களில் தன் பெயரில் உள்ளவை போலிக்கையெழுத்துக்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
புதன் கிழமை அன்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஆங்கிலத்தில் தாக்கல் செய்த நான்குபக்க மனுவில் அனைத்து பக்கங்களிலும் தமிழில் கையெழுத்து போட்டிருந்தார்ஜெயலலிதா. வழக்கத்திற்கு மாறாக ஜெயலலிதா போட்டிருந்த தமிழ் கையெழுத்துபற்றி நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன் கேள்வி எழுப்பினார்.
உரிய விளக்கம் அளிக்கும்படி மனுவை திருப்பிக் கொடுத்தார்.
அதற்கு வியாழக் கிழமை ஜெயலலிதாவினச சார்பில் அவரது வக்கீல் விளக்கம்அளித்தார். அதன் விவரம் வருமாறு:
தமிழில் கையெழுத்து போடுவது என்று முடிவு எடுத்து அதன்படி ஜெயலலிதாகையெழுத்து போட்டு வருகிறார். உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்அனைத்து மனுக்களிலும் தமிழில் தான் அவர் கையெழுத்து போட்டு வருகிறார்.
அரசு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கும்படி இந்த நீதிமன்றத்தில்தாக்கல் செய்துள்ள மனுவை நன்கு படித்து அறிந்த பிறகே அவர் தமிழில் கையெழுத்துபோட்டுள்ளார் என்றார் வக்கீல். பின்னர் இந்த விளக்கத்தை நீதிபதி ஏற்றார்.












Click it and Unblock the Notifications