விடுதலைப் புலிகள் மீது அமெரிக்க குழுவிடம் இலங்கை புகார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் அமைதி ஏற்பட விடுதலைப் புலிகள் விரும்பவில்லை என்று இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் இலங்கை அரசுபுகார் கூறியுள்ளது.

4 பேர் அமெரிக்க நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது. இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமரை இக்குழுவினர் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

அவர்களிடம் விடுதலைப் புலிகளின் நடவடிக்கை பற்றி போர் நடைபெற்று வரும் வட பகுதியில் தற்போதைய நிலவரம் பற்றியும் அமைச்சர்எடுத்துரைத்தார்.

இலங்கையில் அமைதி ஏற்பட விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. போருக்கான காரணம் விடுதலைப் புலிகளுக்குத் தான் தெரியும். இலங்கை அரசுமேற்கொண்டுள்ள அமைதி நடவடிக்கைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

தற்போதுள்ள நிலையில் எந்த அமைதித் திட்டத்தையும் விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றும் அமெரிக்கக் குழுவிடம்கதிர்காமர் கூறியுள்ளார்.

மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து விடுதலைப் புலிகளுக்கு அதிக நிதி உதவி கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் போரைத் தொடர்ந்துநடத்துகின்றனர்.

வட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை அரசு செய்து வருகிறது. விடுதலைப் புலிகளும் தங்களுக்குத்தேவையான பொருட்களை அதிக அளவு இருப்பு வைத்துள்ளனர்.

சிறுபான்மை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி உதவி நின்றுவிடும் என்று கருதுகிறோம் என்று அமெரிக்கக் குழுவிடம் அமைச்சர் கதிர்காமர்கூறியதாக வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தனி நாடு கோரிக்கையை அமெரிக்கா எதிர்க்கிறது என்று கதிர்காமரிடம் அமெரிக்க குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+