10,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்கிறது நெட்டிஸன்
சென்னை:
இந்தியா முழுவதிலும் கம்ப்யூட்டர் கல்வியை பரப்புவதற்காக 10,000 ஆசிரியர்களைநியமிக்க சென்னையைச் சேர்ந்த நெட்டிஸன்-2010 என்ற அமைப்பு முடிவுசெய்துள்ளது.
2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவை கம்ப்யூட்டர் கல்வியறிவு பெற்ற நாடாகமாற்றுவதற்கான திட்டத்தை இந்த அமைப்புத் தீட்டியுள்ளது. அதைசெயல்படுத்துவதற்காக இந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க நெட்டிஸன்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தலைவர் பி.ஐ.பீட்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பொதுமக்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் கல்வியை இந்த ஆசிரியர்கள் கற்றுத்தருவார்கள்.
டெலிபோன், டெலிவிஷன் போல இன்டர்நெட்டும் வாழ்க்கையின் அத்தியாவசியவிஷயமாகி விட்டது. இருப்பினும் இந்தியாவிலுள்ள 90 சதவீதம் பேருக்குகம்ப்யூட்டரை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. இதுதுரதிர்ஷ்டவசமானது.
இன்டர்நெட் மூலம் வாழ்க்கைத் தரத்தை எப்படி உயர்த்துவது என்பது பற்றியும்நாங்கள் பொதுமக்களுக்குக் கற்பிக்கப் போகிறோம் என்றார் பீட்டர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications