கோவை, நீலகிரியில் கடும் மழை
Subscribe to Oneindia Tamil
கோவை:
நீலகிரி, கோவை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனையடுத்து பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. நகரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த காற்றுடன்மழை இருந்தது.
கோவை நகரைத் தவிர, ஆழியாறு, பொள்ளாச்சி , பரம்பிக்குளம் உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது.இந்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், கோவை மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம்உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால்அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்தது. பின்னர் இவை சரி செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications