118 பேர் இறந்ததற்கு நானே பொறுப்பு - ரஷ்ய அதிபர் புடின்
மாஸ்கோ:
ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் ஊழியர்கள் 118 பேரும் இறந்ததற்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். நான் குற்றவாளி என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான குர்ஸ்க் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்க்டிக் கடல்மூழ்கியது. அதில் இருந்த 118 பேரும் இறந்தனர்.
இவ் விபத்து ஆகஸ்ட் 14-ம் தேதி நடந்தது. ஆனால், சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஆகஸ்ட் 21-ம் தேதி ஆகிவிட்டது.
மீட்புப் பணிக்கு வெளிநாட்டின் உதவி கோர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் காலம்தாழ்த்தியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதனால், விபத்து நடந்தஅடுத்த சில நாட்களுக்கு உயிருக்குப் போராடிய 118 பேரையும் மீட்க முடியாமல்போய்விட்டது.
மீட்புப் பணி கைவிடப்பட்ட நிலையில், கப்பலுக்குள் இருக்கும் வீரர்களின் சடலங்கள்இன்னும் மீட்கப்படவில்லை. இந் நிலையில், இறந்துபோன வீரர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் ரஷ்யா முழுவதும் புதன்கிழமை துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அதிபர் விளாடிமிர் புடின் உரையாற்றினார்.கடற்படை ஊழியர்கள் 118 பேரும் இறந்ததற்கு நானே பொறுப்பேற்கிறேன். நானேகுற்றவாளி என்று அவர் அப்போது தெரிவித்தார்.
இதற்கிடையே, புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த இரங்கல் கூட்டமும் ரத்துசெய்யப்பட்டது. உடல்களை மீட்கப்பட்ட பிறகு இக் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாம் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து இக்கூட்டம் கைவிடப்பட்டது.
சம்பவத்தில் இறந்துபோன 118 பேருடைய குடும்பத்தினருக்கும் தலா ரூ. 3.15 லட்சம்நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இந் நிலையில் நீர் மூழ்கிக் கப்பல் வீரர்கள் இறந்ததற்கு ரஷ்யாதான் முழுக் காரணம்என்று பிரிட்டன் மற்றும் நார்வே நாடுகளின மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்தவுடன் மீட்புப் படையினரை உடனே அழைக்காதது; சம்பவஇடத்துக்குச் செல்ல உடனே அனுமதி வழங்காதது; மீட்புப் பணியை மேற்கொள்ளஎங்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்காதது போன்ற நடவடிக்கைகளால்தான்கப்பலுக்குள் சிக்கியவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை.
இதற்குக் காரணம் ரஷ்யாதான் என்று மீட்புப் பணியில் ஈடுபட்ட நார்வே மற்றும்பிரிட்டன் மீட்புக் குழுவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
விபத்துக்குள்ளாகிய நீர் மூழ்கிக் கப்பலுக்குள் சிக்கியவர்களை மீட்க உதவும் நவீனசிறிய நீர்மூழ்கிக் கருவியைப் பயன்படுத்த ரஷ்யர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.அக் கருவியைப் பயன்படுத்தியிருந்தால் நிச்சயம் பலரை உயிருடன் மீட்டிருக்கமுடியும்என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications