பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக பாக். வீரர்கள் மீது புகார்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் மீது செக்ஸ் புகார் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் லாகூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அணிவீரர்கள் அருகில் இருந்த ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

அப்போது சாஹித் அபிரிதி, ஹசன் ராஸா, அதிக்-உஸ்-ஸமான் ஆகிய முன்று பேரும்ஹோட்டலில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகப் புகார்கள்கூறப்பட்டுள்ளன.

தற்போது இவர்கள் மூவரும் சிங்கப்பூரில் மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டித்தொடரில் விளையாடி வருகின்றனர். இத் தொடர் முடிந்து பாகிஸ்தான் அணி நாடுதிரும்பியவுடன் புகார் கூறப்பட்டுள்ள மூன்று வீரர்களிடமும் விசாரணை நடத்தப்படும்.

மூன்று பேர் மீது புகார்கள் கூறப்பட்டுள்ளனதே தவிர, குற்றம் நிரூபிக்கப்படவில்லை.முழுச் சுதந்திரத்துடன் 3 பேரிடமும் விசாரணை நடத்தப்படும். மூன்று இளம் கிரிக்கெட்வீரர்களின் எதிர்காலத்தை நாங்கள் பாழ்படுத்தமாட்டோம்.

அதே நேரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வீரர்களும் கடுமையாகத்தண்டிக்கப்படுவார்கள். முதலில் விசாரணை நடத்தப்படும். அதன் பிறகு புகார்களுக்குவிளக்கம் அளிக்க 3 பேருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த செக்ஸ் புகார் குறித்து விரிவான மற்றும் முழுமையான அளவில் விசாரணைமேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அணியின் பயிற்சியாளர் ஜாவித் மியான்தத்திடம் முதல் விசாரணைகேட்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில்தான்வீரர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.

கென்யா, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம்சென்றிருந்தபோது இதுபோன்ற செக்ஸ் முறைகேடுகளில் ஈடுபட்டதாக பாகிஸ்தான்கிரிக்கெட் வீரர்கள் சிலர் மீது புகார்கள் கூறப்பட்டன.

ஆனால், அது பற்றி எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இப்போதுநடந்துள்ளதாகக் கூறப்படும் இந்த செக்ஸ் முறைகேடு பற்றி பாகிஸ்தான்பத்திரிக்கைகள் எல்லாம் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், வீரர்களின் பெயர்களைஅவை வெளியிடவில்லை.

ஏற்கெனவே லஞ்ச ஊழல் புகாரில் சிக்கி பாகிஸ்தான் அணி நிலைகுலைந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் சலீம் மாலிக்குக்கு கிரிக்கெட் விளையாட ஆயுட் காலத் தடைவிதிக்கப்பட்டது. வாஸிம் அக்ரம் உள்பட சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இந் நிலையில், இப்போது பாகிஸ்தான் வீரர்கள் மீது செக்ஸ் முறைகேடு புகார்கள்கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+