ஈவ் டீசிங்கிற்கு திண்டுக்கல் மாணவி பலி
திண்டுக்கல்:
ஈவ் டீசிங் கொடுமையால் திண்டுக்கல்லில் பள்ளி மாணவி பலியானார்.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவி யாழினி. இவர் பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த பஸ்சில், சில வாலிபர்கள் படியில் தொங்கிக் கொண்டு வந்தனர். யாழினி அருகே பஸ் வந்தபோது, அந்த வாலிபர்கள்யாழினியின் சட்டையைப் பிடித்து இழுத்துள்ளனர். இதனால் யாழினி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு ரத்தம்கொட்டியது.
இந்த சம்பவத்தைப் பார்த்த உடன் வந்த மாணவிகள் பதறினர். அவர்கள் கூச்சல் போட்டுக் கத்தியும் பஸ் நிற்காமல் சென்று விட்ட்து. உடனடியாகயாழினியை அங்கிருந்தோர், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி யாழினி இறந்தார்.
தமிழகத்தில் ஈவ் டீசிங் மீண்டும் அதிகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது. காஞ்சீபுரத்தில் கல்லூரியில் படித்து வந்த தீபா என்ற மாணவியும், சேலத்தில் ஒருமாணவியும் ஈவ் டீசிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications