குமாரமங்கலம் அஸ்திக்கு கருணாநிதி அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கொண்டு வரப்பட்ட மறைந்த அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அஸ்திக்கு தமிழக முதல்வர் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.
டெல்லியில் மரணமடைந்த மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அஸ்தி கலசம் விமானம் மூலம் வெள்ளிக் கிழமை சென்னை கொண்டுவரப்பட்டது.
சென்னையில் தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் மூப்பனார்,மேயர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, கே.என்.நேரு, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், திண்டிவனம் ராமமூர்த்தி, திருநாவுக்கரசு,ஆர்.எம்.வீரப்பன், குமரிஅனந்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ரங்கராஜனின் மனைவி கிட்டி, மகன், மகள் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி ஆறுதல் கூறினார். இந் நிகழ்ச்சியில் பா.ஜ.க .தலைவர் கிருபாநிதி,இல.கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications