குளோனிங் ஆராய்ச்சிக்கு அமெரிக்காவுக்கு வாடிகன் கண்டனம்
ரோம்:
மனிதக் கரு செல்லில் ஆராய்ச்சி மேற்கொள்ள விஞ்ஞானிகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதற்கு வாடிகன் அரசு கடுமையான கண்டனம்தெரிவித்துள்ளது.
அத்தகைய நடவடிக்கைகள் ஒழுக்கமற்றது மட்டுமல்லாமல் சட்டவிரோதமானதும் ஆகும் என்று வாடிகன் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தெராபேடிக் குளோனிங் அல்லது எம்புரொயோனிக் ஸ்டெம் செல் உற்பத்திக்கு மனிதக் கரு செல்களைப் பயன்படுத்துவதில் தவறில்லைஎன்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மனிதக் கரு செல்லில் ஆய்வு நடத்துவதற்கு அனுமதி கேட்டு அமெரிக்க அரசுக்கு விஞ்ஞானிகள் விண்ணப்பித்திருந்தனர். இதுநாள் வரை அதற்கு அனுமதிதரவில்லை.
விண்ணப்பத்தை முழுயாை பரிசீலித்த பிறகு வியாழக்கிழமைதான் அதற்கு அமெரிக்க அரசு அனுமதி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபெர்டிலில் கிளினிக்குகளில் சிகிச்சைக்குச் சேர்ந்த நோயாளிகள் தானமாகக் கொடுத்த கரு செல்களில்தான் இத்தகைய பரிசோதனைகள்மேற்கொள்ளவேண்டும் என்றும் அமெரிக்க அரசு கூறியுள்ளது.
இத்தகைய ஆராய்ச்சிக்கு இங்கலாந்தும் அனுமதி கொடுத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் இந்த அனுமதிக்கு வாடிகன் அரசு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
உயிருடன் உள்ள மனிதக் கரு செல்லில் எந்த ஆய்வும் மேற்கொண்டாலும் அது ஒழுக்கமற்ற செயல் மட்டுமல் சட்டவிரோதமானது. மனிதக்கருவுக்கு என்று தனி அடையாளம் உள்ளது. அது வளரும் தன்மை கொண்டது. அதில் உயிர் உள்ளது. அதில் ஆராய்ச்சி செய்வது கண்டிக்கத்தக்கது என்று வாடின்அரசு கூறியுள்ளது.
மனிதக் கருவுக்குப் பதிலாக வளர்ந்த மனிதனின் செல்லில் இத்தகைய ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளலாம் என்று வாடிகன் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். அதற்கு விஞ்ஞானிகளை பல நாடுகளின் அரசுகள் ஊக்குவிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications