ஒரு காதல் ... இரு மரணங்கள்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

உயிருக்கு உயிராக காதலித்து வந்த காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமானதால் ஆத்திரமடைந்தகாதலன், நண்பருடன் சேர்ந்து காதலியைக் கற்பழித்துக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலவாக்கம் குரும்பிறைக் காலனி பகுதியைச் சேர்ந்தவர். ராஜூ.கூலித்தொழிலாளி. இவரது மகள் மாலா. வயது 22. அதே பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.

ரமேஷூம், மாலாவும் சில மாதங்களாகக் காதலித்து வந்தனராம். இருவரும் தங்கள் வீடுகளில் காதல்விவகாரத்தைச் சொல்லவிருந்த நேரத்தில் மாலாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், பெற்றோர் பார்த்தமாப்பிள்ளை மாலாவுக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் அவர் தன் காதலன் ரமேஷிடம் தனக்கு திருமணம்நிச்சயமாகி விட்டதைக் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திருமண ஆசை காட்டிமாலாவை தனியே அழைத்துச் சென்றார். அதற்குப் பின் ரமேஷ் தனது நண்பன் மோகனையும் அழைத்துக்கொண்டார்.

இரண்டு பேருமாகச் சேர்ந்து மாலாவைக் கற்பழித்துக் கொன்று அதே ஊரில் உள்ள தோட்டத்தில் மரம் ஒன்றில்பிணமாகத் தொங்கவிட்டுச் சென்று விட்டனர்.

மாலாவைக் காணாததால் வருத்தமடைந்த அவரது பெற்றோர்கள் எல்லா இடங்களிலும் தேடினர். இறுதியில் அவர்மரத்தில் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தனர். நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைபிடிக்காததால்தான் மாலா தற்கொலை செய்து கொண்டார் என்று நினைத்து அவரது பெற்றோர்கள் மாலாவைஅடக்கம் செய்து விட்டனர்.

ஆனால் சில நாட்களுக்குப் பின் மாலாவின் அண்ணன் பாஸ்கருக்கு தன் தங்கை மாலா, ரமேஷ் என்ற வாலிபரைக்காதலித்த விஷயம் தெரிய வந்தது. இதனால் தன் தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாக பாஸ்கர் கருதினார்.உடனடியாகப் போலீஸில் புகார் கொடுத்தார்.

போலீஸ் விசாரணையைத் தீவிரப்படுத்தியது. போலீஸாருக்கு விஷயம் தெரிந்து விட்டதே என்றுவேதனையடைந்த ரமேஷ் விஷம் குடித்து, உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதற்குள் போலீஸார் ரமேஷின் நண்பர் மோகனைப் பிடித்து போலீஸ் பாணியில் விசாரணை நடந்தது.விசாரணையில் தானும், ரமேஷூம் சேர்ந்து மாலாவைக் கற்பழித்துக் கொலை செய்த விவரத்தை மோகன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ்இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+