ஒலிம்பிக் போட்டி: வாய்ப்பை இழந்தது தலிபான்

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

ஆஸ்திரேலியாவலி சிட்னி நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியைக் காண தாலிபான் ராணுவ ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்டஅழைப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வாபஸ் பெற்றுக் கொண்டது.

தாலிபான் ராணுவ ஆட்சியாளர்கள் 4 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தான் அரசைக் கவிழ்த்து அரசைக் கைப்பற்றிக் கொண்டனர். இதையடுத்து சிட்னிஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ஆப்கான் வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது.

ஆனால், ஒலிம்பிக் போட்டியைக் காண தாலிபான் ராணுவ ஆட்சியைச் சேர்ந்த இருவருக்கு கருணை அடிப்படையில் அனுமதி அளித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிஅழைப்பு விடுத்தது.

ஆனால், ஆப்கானிஸ்தானில் தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக தாலிபான் பகுதி என்று அறிவிக்கப்படவில்லை.இதனால், தாலிபான் ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வாபஸ் பெற்றுக் கொண்டது.

மேலும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் விளையாட்டுகளில் பங்கு கொள்ளக்கூடாது, கல்வி கற்கக்கூடாது, வேலைக்குச் செல்லக்கூடாது என்றுதாலிபான் ராணுவ ஆட்சி தடை விதித்துள்ளது. அது தவிர, சர்வதேச பயங்கரவாதத்திலும் அந்த ஆட்சி ஈடுபட்டுள்ளது.

மேற்கண்ட காரணங்களாலும் தாலிபான் ராணுவ ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+