தண்ணீர் தேடி சென்னை விடும் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மிக பயங்கரமான குடிநீர் பிரச்சனையை எதிர்கொள்ளுகின்ற நிலையில் இருக்கிறதுதமிழகத்தின் தலைநகர் சென்னை.

சென்னை நகருக்கு பூண்டி, சோழாவரம்,ரெட்ஹில்ஸ் ஆகிய மூன்று ஏரிகளில் இருந்துகுடிநீர் வருகின்றது. இந்த ஏரிகளில் தண்ணீர் குறைந்து பல மாதங்கள் ஆகிவிட்டன.

ரெட்ஹில்ஸ் ஏரியில் மட்டும் கொஞ்சமாக தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. இந்த மூன்றுஏரிகளின் மொத்தக்கொள்ளவு 741.2 கோடி கன அடி. இதனுடன் செம்பரம்பாக்கம்ஏரியும் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து வைக்கிறது.தற்பொழுதைய நிலவரப்படி இந்த ஏரிகளின் மொத்தத் தண்ணீர் 55 கோடி கன அடிநீர்தான் இருக்கிறது.

சென்னையில் ஒவ்வோர் ஆண்டும் 140 செ.மீட்டர் மழை பெய்யும். கடந்த ஆண்டுவெறும் 60.7 செ.மீ மழைதான் பெய்தது. இதன் காரணமாக சென்னைக்குக் குடிநீர்வழங்கும் ஏரிகள் நிரம்பவேயில்லை. அரசு அதற்கான தகுந்த நடவடிக்கைகளைஎடுத்ததா என்பதும் தெரியவில்லை.

சென்னை நகருக்கு குடிநீர் வினியோகத்தை சீரமைக்க புதிய குடிநீர் ஆதாரமாகஆந்திராவில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் சென்னைக்குதண்ணீர் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டது. 17 ஆண்டுகள் ஆகியும் இன்னும்இந்தத்திட்டம் முழுமை பெறாத நிலையில் கடந்த 96-ம் ஆண்டு கிருஷ்ணா தண்ணீர்வந்ததாக அறிவிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிருஷ்ணா ( ஆந்திரா)ஆற்றின் குறுக்கே சைலம் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து திறந்த கால்வாய்வெட்டி பெண்ணாற்றின் குறுக்கே உள்ள சோமசீலா அணைக்கு தண்ணீர் கொண்டுவந்து சேமித்து, அங்கிருந்து மீண்டும் திறந்த கால்வாய் மூலம் கண்டலேறு அணைக்குதண்ணீர் கொண்டு வந்து சேமித்து அங்கிருந்து கால்வாய் மூலம் சென்னை அருகேஉள்ள பூண்டி ஏரிக்குத் தண்ணீர் கொண்டு வருவதுதான் திட்டம்.

இந்தத் திட்டத்தில் சைலம் அணையில் இருந்து சோமசீலா அணை வரையிலானகால்வாய் இன்னும் வெட்டி முடிக்கப்படவில்லை. சோமசீலா அணையில் இருந்துசென்னை வரை கால்வாய் தயாராக இருக்கிறது.

இந்த விவகாரம் இப்படியிருக்க, தற்பொழுது அணைகளில் உள்ள தண்ணீர் பதினைந்துநாட்களுக்கே போதுமானதாக இருக்கிறது. மறுபடியும் மழையைத்தான்எதிர்பார்த்திருக்கிறார்கள் சென்னைவாசிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+