நெல்லை, குமரியில் வெள்ள அபாயம்
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் , தாமிரபரணிஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அணைபகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன்.பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, கடனா நதி அணை என்று மாவட்டத்தில் உள்ளஅணைகள் நிரம்பி வருகின்றன.
குற்றால அருவிகளில் வெள்ளம் கொட்டிக்கொண்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும்பரவலாக மழை பெய்து வருவதால், திருக்குறுங்குடி அருகேயுள்ள கொடுமுடியாறுஅணை திட்டப்பணி மழை காரணமாக பாதித்து உள்ளது.
இங்கு வைத்திருந்த ஒரு மோட்டாரை வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. பணகுடிபகுதிகளிலும் கடந்த நான்கு நாள் பெய்த மழையால் பல குளங்கள் நிரம்பிவழிகின்றன.
வடகரையில் ஆறு வீடுகள் இடிந்து விழுந்தது. வடகரை பள்ளி வாசல் தெருவைச்சேர்ந்த சாகுல் அமீது மனைவி மைதீன் பீவி மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர்படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக பாளை மேட்டுத்திடல் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டத்திலும் மழை தீவிரமாகவே இருக்கிறது. நாகர்கோவில் பகுதியில்வயல்கள் தண்ணீரில் மூழ்கி குளம் போல் காட்சியளிக்கின்றன.
ஆறுகளில் வெள்ளம் ஆக்ரோஷமாக ஒடிக்கொண்டிருக்கின்றன. வீர நாராயணமங்கலம் அருகே விளாவடிக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 100 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.ரோடுகளிலும் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது.












Click it and Unblock the Notifications