அமிதாப் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
மும்பை:
குடும்பத்தோடு தன்னைக் கடத்த தாதாக்கள் திட்டமிட்டுள்ளதாக பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளதையடுத்து அமிதாப் பச்சனின் வீட்டுக்குபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம், நடிகர் அமிதாப் பச்சனுக்குக் கூடுதல் பாதுகாப்பு தருமாறு மகாராஷ்டிர மாநில அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்துமகாராஷ்டிர மாநில அரசு, அமிதாப் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தன்னையும், தனது குடும்பத்தினரையும் கடத்த சிலர் திட்டமிட்டுள்ளாகவும்,இதுதொடர்பாகதொலைபேசி மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், எனவே கூடுதல் பாதுகாப்பு தருமாறும் கோரி அமிதாப் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இதையடுத்து உள்துறை அமைச்சர் அத்வானி, அமிதாப்புக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.இதையடுத்து அந்தேரியிலுள்ள அமிதாப்வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
அமிதாப் தவிர, பிரப இந்தி நடிகர் திலீப் குமார், நடிகை ஹேமாமாலினி ஆகியோருக்கும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறப்பட்டதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications