வவுனியாவில் நூற்றுக்கணக்கில் விடுதலைப் புலிகள் ஊடுருவல்?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வவுனியா பகுதியில் நூற்றுக்கணக்கான விடுதலைப்புலிகள் ஊடுருவியுள்ளனர் என்றதகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தி ஐலண்ட் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 18 ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபின் தலைநகர் கொழும்பு உள்படபல்வேறு இடங்களில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிகள் மும்முரமாகஈடுபட்டுள்ளன.

அக்டோபர் மாதம் 10 ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வவுனியாவில் ஊடுருவியுள்ள விடுதலைப்புலிகள் அங்கிருந்து யானையிறவுபகுதிக்குச் சென்று அங்கு தேர்தலை முறியடிக்கும் செயலிலும் மற்றும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடலாம் என்று தெரிகிறது.

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதை விடுதலைப்புலிகள் விரும்பவில்லை. இலங்கையில் உள்ள சிறிய தமிழர்கட்சிகளோ அல்லது இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியோ வெற்றி பெறுவதைத் தான் விடுதலைப்புலிகள் விரும்புகிறது.

இலங்கையில் நடந்து வரும் தேர்தல் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகள் பல தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. புலிகளின்தற்கொலைப்படைகளும் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் ஒரு வேளை சந்திரிகாவால் புதிய அரசியல் சட்ட சீர்திருத்தத்தை நிறைவேற்ற முடியாமல் போனால் கூட்டணி ஆட்சி வருவதையே புலிகள்விரும்புகிறார்கள் என்று கூறப்படுகிறது. 1980-ல் நடந்த தேர்தலின்போது, விடுதலைப்புலிகள் வடகிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டதாக்குதல்கள் நடத்தியுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், புலிகள் எந்த நோக்கத்தில் வவுனியா பகுதியில் ஊடுருவியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அப்பத்திரிக்கைச் செய்திகூறியுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+