தமிழக மதச்சார்பற்ற கட்சிகளுடன் கம்யூ. கூட்டணி"

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று அக்கட்சியின் அகிலஇந்திய பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறியுள்ளார்.

நமது நாட்டின் 11வது நிதிக் கமிஷன் பரிந்துரைகளை விவாதிக்க பிரதமர் வாஜ்பாய் மறுத்தது ஏன் என்பது பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க மற்றும் தெலுங்கு தேசம் விளக்கம் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யச்சூரிகூறினார்.

திருப்பூரில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படுவதில் எவ்வித மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை.

மத்திய அரசு வருவாயிலிருந்து மூன்றில் ஒரு பகுதி வருவாயை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும். தற்போது 11வது நிதிக் கமிஷன் அளித்துள்ள பரிந்துரையில்28 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லையென்றால் கேரள மாநிலம் தான் அதிகமாகப்பாதிப்படையும்.

நிதிக் கமிஷனின் பரிந்துரைகளை துரதிர்ஷ்டவசமாக வாஜ்பாய், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் விவாதிக்காமல் விட்டுவிட்டார். இவ்வவாறு இந்த பரிந்துரைகளை விவாதிக்க வாஜ்பாய் மறுத்தது ஏன் என்பது பற்றி தி.மு.க.,மற்றும் தெலுங்குதேசம் கட்சியினர்விளக்கம் அளிக்க வேண்டும்.

பல்வேறு மாநிலங்களின் நிதி நிலை மோசமான சூழ்நிலையில் உள்ளன. இந்த மாநிலங்கள் நிர்வாகச் செலவிற்குக் கூட திண்டாடும் நிலை உள்ளது. நிதிக்கமிஷனின் பல்வேறு பரிந்துரைகள் அமல் படுத்தப்பட்டால், இந்த மாநிலங்களின் நிலை இன்னும் மோசமடையும். நாட்டில் நிதி நிலையை ஒரு சீரமைப்புக்குகொண்டு வரவே நிதிக் கமிஷன் பரிந்துரைகள் அமைய வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய்விலை உயர்வை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்து வந்துள்ளது. மேலும் நிறுவனங்களை தனியார்மயமாக்கல் நாட்டிற்கு ஏற்படும் மிகப் பெரும் இழப்பு ஆகும். கடந்த 50 ஆண்டுகளாக நாட்டின் மிகப் பெரும் சொத்தாக விளங்கிய பல நிறுவனங்களைதனியாருக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளோம்.

காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானைத் தவிர்த்து தீவிரவாத இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வரவேற்கத் தக்கது. இந்த பிரச்னைக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றார் யெச்சூரி.

மற்றொரு உறுப்பினரான உமாநாத் கூறுகையில், மார்க்சிஸ்ட் கட்சி வரும் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் பங்கேற்காது. ஆனால், தொகுதிப் பங்கீடுமட்டும் வைத்துக் கொள்ளும். தமிழகத்தில் ஒத்த கருத்துடைய மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+