எஸ்.டி.எஸ். தலைமையில் உதயமாகிறது புதிய கட்சி
சென்னை:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த ஆறு அமைச்சர்கள் சேர்ந்து புதிய கட்சி துவங்குவதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் வீட்டில் கூடி விவாதித்தார்கள்.
முன்னாள் அமைச்சர்கள் பன்ருட்டி ராமச்சந்திரன், கே.ராஜாராம், பொன்னையன், ராஜா முகமது ஆகியோர்தான்இந்த அமைச்சர்கள். இக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆதரவு தருவதாக மற்றொரு முன்னாளானசுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.
ஆலோசனைக்குப் பின் பன்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் ராஜாராம் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,செப்டம்பர் 15 ம் தேதி முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க.நிறுவனர் அண்ணாதுரை பிறந்த நாள். அன்று எங்களதுபுதிய கட்சி ஆரம்பமாகும்.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் ஜாதி அடிப்படையிலும், மத அடிப்படையிலும்செயல்பட்டு வருவது மிகவும் வேதனையான விஷயமாகும். எங்களது புதிய கட்சி கண்டிப்பாக ஜாதிஅடிப்படையில் இயங்காது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் சேவை செய்யக் கூடிய வகையில் இருக்கும் என்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், எம்.ஜி.ஆர். காலத்தில் ஆட்சியில் இருந்ததோடு, ஜெயலலிதாஅமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். பின்னர் வக்கீல் விஜயன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயில் தண்டனைஅனுபவித்த பின் அரசியலிலிருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications