பிளாஸ்டிக்கைக் கண்டித்து கோவையில் ஊர்வலம்
கோவை:
கோவையில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்நடந்தது.
கோவை நகரில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால், நகரில் உள்ள குப்பைகளைஅகற்றுவதிலும் அவற்றை அழிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. மேலும், இதனால் சுற்றுச் சூழல் மாசுபட்டு வந்தது.எனவே பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதிலிருந்து தடை செய்ய பொதுமக்களிடையே விழிப்புணர்வுஏற்படுத்த வேண்டும் என மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இதையடுத்து மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்திஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை கோவை மேயர் கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாநகராட்சிகமிஷனர் ராஜேந்திரகுமார், துணை கமிஷனர் செல்வராஜ், லட்சுமணன் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.












Click it and Unblock the Notifications