பாண்டி சட்டசபையில் பாம்பு ஏற்படுத்திய பீதி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபை வளாகத்தில், உறுப்பினர்கள் அமரும் பகுதிக்குள் புகுந்த பாம்பு, பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.எல்.ஏ.க்கள் அமரும் பகுதியைச் சுத்தப்படுத்துவதற்காக துப்புறவுத் தொழிலாளி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை கதவத்ை திறந்து உள்ளேசென்றார். அப்போது ஆறு அடி நீளமுள்ள பாம்பு அங்கே படம் எடுத்தபடி நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அவர் பயந்து அலறினார்.
இதையடுத்து பிற ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து பாம்பு படம் எடுப்பதை நிறுத்தி விட்டு அங்கிருந்த நழுவியது. பாம்பு பிடிப்பதில் நிபுணர்ஒருவர் வரவழைக்கப்பட்டு ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பாம்பு பிடிக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications