ஒரு நிழல் நிஜமாகியது...
சென்னை:
சினிமா வேறு, நடைறை வாழ்கை வேறு என்று தனித்தனியாக இருந்தாலும், அன்றாடம் நடக்கின்ற விஷயங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் சினிமாவுடன் இணைந்தே நடக்கிறது. சமீபத்திய உதாரணம்..
முதலில் ஒரு சினிமாக் கதை ..
படம் : பார்த்தேன் ரசித்தேன்.
இடம் : சென்னை
பிரசாந்தை, சிம்ரன் காதலிப்பதாகச் சொல்ல பிரசாந்த் மறுக்கிறார். நான் லைலாவைத்தான் காதலிக்கிறேன் என்று பிடிவாதம் பிடிக்க. தயவுசெய்துஎன்னை காதலி. காதலிக்க முயற்சி செய் என்று வற்புறுத்துவார் சிம்ரன்.
பிரசாந்த் பிடிவாதமாக நாம நண்பர்களாகத்தானே பழகினோம். இப்படி காதல் அது, இதுன்னு ஏன் குழப்பிக்கிற என்று பல வழிகளில் பொறுமையாகபுரிய வைப்பார்.
இறுதியில், தனது அண்ணனான ரகுவரனிடம் பிரசாந்த் ஏமாற்றி விட்டான் என்று கதறி அழுவார் சிம்ரன். துடித்துப் போகும் வக்கீல் அண்ணன்ரகுவரன், பிரசாந்தை அழைத்துப் பேசிப் பார்ப்பார். விஷயம் முடிவுக்கு வராமல் பிரசாந்த் பிடிவாதம் பிடிக்க, இறுதியில் ஆத்திரம் அடைந்த ரகுவரன்.யோசித்து, தனது க்ளையண்ட் ரெளெடியிடம், பிரசாந்தைக் கை காட்டி விடுவார்.
சரி தான் வக்கீல் சாருக்கு பையனை பிணமா கொடுத்துட வேண்டியதுதான் என்று ரெளடியும், பிரசாந்தும் ஒரு காட்சியில் மோதிக்கொள்வார்கள். இதுபடம்.
இனி நிஜம்:
இடம்: ஈரோடு.
ஈரோடு இடையன் காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார். இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி படித்துவருகிறார். காமாட்சி அதே கல்லூரியில் பி.காம் மூன்றாவது ஆண்டு படித்து வருகிறார்.
சுரேந்திர குமாரும், காமாட்சியும் ஒரே பஸ்சில் செல்வதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்காககாமாட்சி, சுரேந்திர குமாருக்கு அடிக்கடி போன் செய்வது வழக்கம். சுரேந்திர குமாரை காமாட்சிக்கு பிடித்து விட, நான் உங்களைக்காதலிக்கிறேன் என்றிருக்கிறார்.
பதறிப்போன சுரேந்திர குமார், காதலா நான் உங்களை நண்பராகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். காதலியாக முடியாது. எப்பொழுதும் நாம்நண்பர்களாக இருப்போம் என்று சுரேந்திரகுமார் சொல்ல, காமாட்சி பிடிவாதம் பிடித்தார். இறுதியில் வெறுத்துப்போனார்.
இனி எதற்கு உயிரோடு நாம் வாழ்வது என்று யோசித்து, விஷத்தைக் குடித்தார். ஈரோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் உயிர்பிழைத்துவிட்டார்.
இந்த விஷயம், காமாட்சியின் அண்ணன் கண்ணனுக்கு உறுத்தலாக இருக்க, நண்பர்களுடன் யோசித்தார். என் தங்கை ஆசைப்பட்டு அது கிடைக்கலை. அதுவும்தற்கொலைக்கு வேற அவ போயிட்டா. இதை இப்படியே விடக் கூடாது என்று தீர்மானித்தவர், நண்பர்களுடன் பைக்கில் கிளம்பினார்.
இரவு ஒன்பது மணியளவில், வழக்கமான இடமொன்றில் சுரேந்திரகுமார் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்க அந்த இடத்திலேயே பெரிய வாக்குவாதம்ஆரம்பித்தது. அடுத்த சில நிமிடங்களில் வாக்குவாதம் பெரியதாகி..அரிவாளை தூக்கினார் கண்ணன், சுரேந்திரகுமார் வீழ்ந்தார்.
பலத்த வெட்டுக்காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் தற்பொழுது இருக்கிறார் சுரேந்திரகுமார். கண்ணனையும் மற்றவர்களையும்போலீஸார் தேடிவருகின்றனர்.
க்ளைமாக்ஸூக்கு இன்னும் கொஞ்ச நாளாகும். முடிஞ்சா காத்திருங்க.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications