தனி தமிழ் தேசத்திற்கான முதல் நடவடிக்கையே ராஜ்குமார் கடத்தல்
சென்னை:
தனித் தமிழ் தேசம் அமைவதற்கான முதல் நடவடிக்கையே நடிகர் ராஜ்குமார் கடத்தல் என்று தமிழர் விடுதலைப் படை தீவிரவாதி ரேடியோ வெங்கடேசன்கூறியுள்ளார்.
சந்தன வீரப்பன் விடுதலை செய்யக் கோரும் தடா கைதி ரேடியோ வெங்கடேசன், திங்கள் கிழமை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். அப்போதுஅவரை நிருபர்கள் சூழ்ந்தனர். அதியமான் கோட்டை வெடிகுண்டு வழக்கில் தொடர்புடையவர் வெங்கடேசன்.
கோர்ட் வளாகத்தில் வெங்கடேசன் அளித்த பேட்டி:
தனித் தமிழ் தேசம் அமைப்பதற்கான முதல் நடவடிக்கையே ராஜ்குமார் கடத்தல். இதுதான் ஆரம்பம். 1991-92-ல் கர்நாடகத்தில் தமிழர்களுக்குஎதிரான வன்முறைச் சம்பவத்திற்கு நடிகர் ராஜ்குமாரும், அப்போதைய முதல்வர் பங்காரப்பாவும்தான் காரணம்.
இதற்கு மேல் நாங்கள் யாரையும் கடத்த மாட்டோம். பொதுமக்களிடம் எங்களது போராட்டத்தை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டுவோம்.
என் மீதான வழக்குகளில் இருந்து என்னை விடுதலை செய்தால், நான் வீரப்பனுடன் சேர்ந்து கொள்வேன். இதற்கு முன் வீரப்பனை நான் சந்தித்தது இல்லை.ஆனால், எனது தோழர்களுக்கு வீரப்பனை நன்கு தெரியும். வீரப்பன் தமிழ் போராளிகளின் தலைவர்.
எங்களுடைய முக்கிய கோரிக்கையே காவிரி பிரச்னை தான். வறட்சியான காலத்தில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசு, மழைக் காலத்தில்திறந்து விட்டு அதிக வெள்ளச் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நமது விவசாயிகள் மழைக் காலத்திலும் பாதிப்படைகிறார்கள்.
எங்கள் போராட்டம் மக்களுக்காக தானே தவிர எங்களுக்காக அல்ல. மக்களுக்காக நாங்கள் ஆயுதம் ஏந்துகிறோம். தேயிலை தோட்டதொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் உழைப்பை சுரண்டும் முதலாளிகள் அவர்களை பற்றி கவலைப்படுவதில்லை.தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க வசதி செய்து தருவதில்லை. 20 வீடுகளுக்கு ஒரு வீட்டில் தான் மின் விளக்கு வசதி உள்ளது. இவர்களுக்காகவும்நாங்கள் போராடுகிறோம்.
கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் 15 ஆண்டாக மூடிக் கிடக்கிறது. உலக மொழிகளில் பைபிளுக்கு பிறகு அதிக மொழிகளில்மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை எழுதிய கவிஞனுக்கு கர்நாடகா கொடுக்கும் அவமரியாதையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இதுபோன்ற பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறோம் என்றார்வெங்கடேசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications