செஞ்சோற்றுக் கடன் தீர்ந்து விட்டது ... கூறுகிறார் கண்ணப்பன்
திருவண்ணாமலை:
என்னைப் பழித்த ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டாமல் விட மாட்டேன் என்றுஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் சபதம் விடுத்துள்ளார்.
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன்.அமைச்சராக மட்டுமில்லாமல், ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தார்.
தற்பொழுது கண்ணப்பன் தி.மு.கவுக்கு எதிராக தமிழ்தேசம் என்ற கட்சியைஆரம்பித்துள்ளார். முன்னாள் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் உட்பட,யாதவர் சமுதாய மக்களை திரட்டி அவர்களின் ஆதரவோடு தமிழ்தேசம் கட்சிதுவங்கப்பட்டுள்ளது.
கட்சி ஆரம்பித்து ஒரு சில தினங்களே ஆன நிலையில், திருவண்ணாமல்ை, யாதவஅரசியல் விழிப்புணர்வு எழுச்சி பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டது.
இதில் கண்ணப்பன், முன்னாள் இந்தியன் வங்கிச் சேர்மன் கோபால கிருஷ்ணன்,யாதவர் சபைத் தலைவர்கள் நாகேந்திரன், கலைமணி , மருதபாண்டி ஆகியோர்உட்பட பல தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கண்ணப்பன் சபத உரையாற்றினார், தமிழகத்தில் 15 தொகுதிகளில்நம்முடைய ஆதரவின்றி யாரும் வெற்றி பெறமுடியாது.
தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்று இப்பொழுது நான் சொல்ல மாட்டேன்.யார் என்னைப் பழித்தார்களோ அவர்களுக்கு பாடம் கற்பிப்பேன்.
யாரிடமும் சோரம் போக மாட்டேன். நாம் என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.நம்முடைய கட்சியை சாதிக்கட்சி என்று தி.மு.க, த.மா.கா , அ.தி.மு.க வினர்சொல்கிறார்கள். சாதிக்கட்சி வருவதில் தவறில்லை. ஆனால் சாதியின் பெயரில்வன்முறைதான் செய்யக் கூடாது. அதை நாங்கள் என்று ம் செய்யமாட்டோம்.
தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறது. தமிழகத்தின் தலைவிதியை நாம்நிர்ணயிப்போம். நாம் வேறு கட்சியில் உறுப்பினர்களாக இனி இருக்கக் கூடாது. இனிநீங்கள் மக்கள் தமிழ் தேசகட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்.
காணாமல் போய்விட்டான் கண்ணப்பன் என்று பேசுகிறார்கள். நான் என்ன காளானா?நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் வந்தவன். சிறுபான்மை மக்களுக்கும்,பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் நாம் என்றும் துணைநிற்போம். வரும் காலத்தில் மக்கள் தமிழ் தேசம் கட்சி மக்கள் இயக்கமாகவே மாறும்.
அ.தி.மு.க.வில் எனது செஞ்சோற்றுக்கடனை தீர்த்துவிட்டேன். துரோகம் செய்தவன்நான் இல்லை. சேராத இடம் சேர்ந்த தால் நான் கெட்டுப் போனதாக கூறுகிறார்கள்.சேராத இடத்தில் சேர்ந்தால் அவர்கள் தான் கெட்டுப் போய்உள்ளார்கள் என்றுஆவேசமுழக்கமிட்டார் கண்ணப்பன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications