உடுமலை குண்டுவெடிப்பு வழக்கு .. செப்.4 ல் விசாரணை
கோவை:
உடுமலை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 4ம் தேதி நடக்கிறது.
கோவை மாவட்டம், உடுமலைப் பேட்டையில் கடந்த 1996-ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில், 3 பேர் இறந்தனர்.இந்த வழக்கு கோவை தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஆகஸ்ட் 28ம் தேதி நடந்த விசாரணையில் 3 பேர் விசாரணை செய்யப்பட்டனர். இந்த விசாரணையை மீண்டும்செப்டம்பர் 4ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கை விசாரிப்பதற்கென்றே தனியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில்,நீதிபதி தணிகாசலம் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
சிறைக் கலவர வழக்கு:
இதற்கிடையே, கோவை சிறையில் நடந்த கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 28-ம் தேதிகுற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது.
கடந்த 98ம் ஆண்டு சிறைக்குள் நடந்த கலவரத்தில் காவலர்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக கோவைமாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 3 ல் விசாரணை நடந்து வருகிறது. இதில் குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications