மக்கள் செலுத்தும் வரி மக்களுக்கே ... முதல்வர் கருணாநிதி
திருவாரூர்:
பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியை அவர்களுக்காகவேச் செலவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் புதிய கலெக்டர் அலுவலகக் கட்டிட த் திறப்பு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
பொதுமக்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படுவது இயற்கை. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து இப்பிரச்சனை தீர பாடுபட வேண்டும். அப்படிப்பாடுபட்டால்தான் மக்களின் பிரச்சனைகள் தீரும்.
காவிரி டெல்டா பகுதியில் 50 வருடங்களாகத் தூர் வாரப்படாத காரணத்தால்தான் தண்ணீர் வருவதில் சிரமம் இருந்தது. இதையடுத்து கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன்பு 108 கோடி ரூபாய் செலவில் தூர் வாரும் பணி தொடங்கியது. 7,800 கிலோ மீட்டர் நீளமுள்ள ஆறுகள், கால்வாய்கள், வடிகால்கள்தூர்வாரப்பட்டுள்ளன. தற்போது காவிரியில் 37 ஆயிரம் கனஅடித் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இந்த அரசு விவசாயிகளின் கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்கிறது.
1996 ம் ஆண்டுக்குப் பின் 11.5 லட்ச ரூபாய் செலவில் 8 லட்சம் உர அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நேரடி கொள்முதல்நிலையங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியிலிருந்து திறக்கப்படுகின்றன.
தி.மு.க.அரசு கொண்டு வந்த நில உச்ச வரம்பு சட்டத்தினால் விவசாயிகள் பலர் பயனடைந்துள்ளனர்., குடியிருப்பு மனைகளை அதில் குடியிருக்கும் விவசாயத்தொழிலாளர்களுக்கே சொந்தமாக்கும் வகையில், குடியிருப்பு மனைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
மக்களிடம் வரி வாங்குகின்ற ஆட்சி, அந்தப் பணத்தை அவர்களுக்கே செலவழிக்க வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications