கோவை குண்டுவெடிப்பு விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு தனி நீதிமன்ற நீதிபதி தணிகாசலம்ஒத்தி வைத்தார்.

கோவையில் கடந்த 97ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குண்டு வெடித்தது. இதில் 60 பேர் இறந்தனர். இந்த வழக்குகோவையில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கு தொடர்பாக கேரள ஜனநாயக மக்கள் கட்சியைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானி, அல் உம்மா இயக்கத்தைச்சேர்ந்த பாட்ஷா உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளனர்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டு விசாரணை தொடக்க நிலையில்உள்ளது. நீதிமன்ற நீதிபதி தணிகாசலம், குற்றவாளிகள் வாதாட வசதியாக தனி வக்கீல்களை நியமித்துக் கொள்ளவேண்டுகோள் விடுத்துள்ளார்.

வக்கீல்களை நியமிக்க அனைவரும் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் எனக் கைதிகள் கோரிக்கை விடுத்துவருவதால், விசாரணை துவங்க அனுமதி கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

குற்றம் சுமத்தப்பட்ட 167 பேரும் இன்று ஆகஸ்ட் 29ம் தேதி ஆஜர் செய்யப்பட்டனர். இதில் வக்கீல்களை நியமிக்கமீண்டும் அவகாசம் அளி த்து நீதிபதி தணிகாசலம், வழக்கை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்துஉத்தரவிட்டார்.

பாட்ஷாவுக்கு பல்வலி: கோவை சிறையில் இருந்து வரும் அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷாவுக்கு திடீர்பல்வலி ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை கோவை அரசு மருத்துவமனையில்அரைமணிநேரம் சிகிச்சை பெற்றார். இதன் பின்னரே நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+