பார்வதிஷா கொலையில் மைத்துனருக்குத் தூக்குத் தண்டனை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பார்வதி ஷா கொலைவழக்கில் முக்கியக் குற்றவாளியான அவரது மைத்துனருக்குத் தூக்குத் தண்டனைவழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாண்டிச்சேரி சட்ட வரலாற்றில் இது மூன்றாவது தூக்கு தண்டனையாகும்.
பாண்டிச்சேரியில் ரவி ஷா என்ற வைர வியாபாரியின் மனைவி, பார்வதிஷா என்ற பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி நள்ளிரவில்கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பார்வதிஷாவின் மைத்துனர் கமல்ஷா , மாமியார் பத்மாவதி ஷா ஆகியஇருவரையும் போலீஸார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வழக்கு விசாரணை புதுவை செஷன்ஸ் கோர்டில் தலைமை நீதிபதி இ.வி.குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பு திங்கள்கிழமை மாலை3.30 மணிக்கு கூறப்படுவதாக இருந்தது. ஒரு நாள் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு கூறப்பட்டது.
பாண்டிச்சேரி கவர்னர் மாளிகை அருகேயுள்ள செயின்ட் லூயிஸ் வீதியை சேர்ந்தவர் ரவிஷா . வயது 30. வைர வியாபாரி. இவரது மனைவி பார்வதிஷா. இவர்கடந்த வருடம் ஜூலைமாதம் 14-ம் தேதி அன்று இரவு தனது மைத்துனர் கமல் ஷாவால் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ரவிஷாவின் தம்பி கமல்ஷா ( 27 வயது) கைது செய்யப்பட்டார். கொலையை மறைக்க உடந்தையாக இருந்ததாக ரவிஷாவின் தாயார்பத்மாவதிஷா (வயது 56) வும் கைது செய்யப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணை , பாண்டிச்சேரி தலைமை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி இ.வி.குமார் முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில்செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி குமார் அறிவித்தார். அதன் படி செவ்வாய்க்கிழமை மாலை 3.15 மணிக்குகமல்ஷாவும் , பத்மாவதி ஷாவும் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். நீதிபதி குமார் 3.50க்கு கோர்ட்டிற்கு வந்தார்.
நீதிபதி குமார் நீதிமன்றத்தில் கூறும் பொழுது, கமல்ஷா மீது சுமத்தப்பட்டுள்ள கொலை , கற்பழிப்பு, தற்கொலை முயற்சி மற்றும் தடயங்களைமறைத்தல் ஆகிய குற்றங்கள் நிருபிக்கப்பட்டுள்ளன என்றார்.
வழக்கில் 2-வது குற்றவாளியாக உள்ள பத்மாவதிஷா மீது சுமத்தப்பட்டுள்ள கொலை குற்றத்தில் இருந்து அவரை விடுதலை செய்கிறேன். பத்மாவதிஷா மீது தடயங்களை மறைத்தது என்ற குற்றச்சாட்டு நிருபணமாகியுள்ளது என்றும் நீதிபதி அறிவித்தார்.
பின்னர் நீதிபதி குமார், தீர்ப்பு சம்பந்தமாக இரு தரப்பு வக்கீல்களின் கருத்துக்களையும் கேட்டார். அப்பொழுது அரசு தரப்பு வக்கீல்களின் கருத்துக்களைகேட்டார். அரசு தரப்பு வக்கீல் கந்தசாமி கூறும் பொழுது, இது ஒரு அபூர்வமான வழக்கு. எனவே அதிகபட்ச தண்டணை கமல்ஷாவுக்கு வழங்கவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் இதே போல் ஒரு வழக்கிலும், அண்ணன் மகளை கற்பழித்து கொலை செய்த மற்றொரு வழக்கிலும்குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
கமல்ஷா தரப்பில் , ஆஜரான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் யசோதாவரதன் கூறும் பொழுது, கமல்ஷாவின் வயதைக் கருத்தில் கொண்டுகுறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்.
இரு தரப்பு வழக்கறிஞர்களின் கருத்துக்களையும் கேட்ட நீதிபதி குமார் , செவ்வாய்க்கிழமை மாலை தீர்ப்பு வழங்கினார். கற்பழிப்பு மற்றும் கொலைகுற்றத்திற்காக கமல்ஷாவுக்கு தூக்குதண்டனையும், கற்பழிப்புக்கு 10 ஆண்டுகள், கொலையை தற்கொலை என்று நாடகமாடியதற்காக இரண்டுஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். பார்வதி ஷாவின் மாமியார் பத்மாவதி ஷாவுக்கு, சாட்சியங்களை மறைத்த குற்றத்திற்காக இரண்டுஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார் நீதிபதி குமார்.












Click it and Unblock the Notifications