மேட்டுப்பாளையத்தில் லாரி மோதி 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
மேட்டுப்பாளையம் அருகே மொபட்டில் சென்றவர்கள் மீது லாரி மோதியதில் இருவர்இறந்தனர்.
கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜக்கம்மாநாயக்கன்பட்டியைச்சேர்ந்தவர்கள் தங்கவேலு மற்றும் கொண்டசாமி.
இருவரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை காரமடை அருகே உள்ள ஒரு கோயிலுக்குமொபட்டில் சென்று கொண்டிருந்தனர். காரமடை அருகே தேக்கம்பட்டிப் பிரிவில்சென்றபோது எதிரே ஒரு லாரி வந்தது.
இந்த லாரி மொபட்டில் சென்ற இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவஇடத்திலேயே இறந்தனர். காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications