இந்தியாவில் உள்ள 11 அனல் மின் நிலையங்களுக்கு இங்கிலாந்தின் பாதுகாப்பு விருதுகள்
டெல்லி:
தேசிய அனல் மின் கழகம் அமைத்துக் கொடுத்துள்ள 11 மின் உற்பத்திநிலையங்களுக்கு இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் விருதுகள்வழங்கப்பட்டுள்ளன.
1999-ம் ஆண்டுக்கான இந்த விருதுகள், தேசிய அனல் மின் கழகத்தின் திட்டங்களில்உயர் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்தற்காக வழங்கப்பட்டுள்ளது.
ராமகுண்டம், ஃபராக்கா, ரிஹான்ட், விந்தியாசல், உன்சாஹர், தாத்ரி, தால்சார்கானிஹா, தால்சார் தெர்மல், அன்தா, ஜானோர் காந்தர், பாரத்பூர் ஆகிய இடங்களில்உள்ள தேசிய அனல் மின் கழகத்துக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களுக்குஇந்த விருதுகள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் தேசிய அனல் மின் கழகம் அமைத்துக் கொடுத்துள்ள மின் உற்பத்திநிலையங்களால் 19,435 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும்,தேசிய அளவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த அனல் மின் அளவில் இது 20சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications