அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிறது அ.தி.மு.க.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அ.தி.மு.க தரப்பில், காங்கிரஸ் கட்சி மீது அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகிவருகின்றனர்.

போயஸ் கார்டனில் இருந்து உத்தரவு வந்த அடுத்த நிமிடம், மிகவும் காரசாரமாகஅறிக்கைகள் வரும் என்கிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன் மீதும் கடும் கோபத்தில்இருக்கிறார் ஜெயலலிதா. வீரப்பன் விவகாரத்தில் ஏற்கனவே இருவரும்மோதிக்கொண்டனர். அதன் பிறகு அடக்கி வாசிப்பார்கள் என்று அ.தி.முக தரப்பில்எதிர்பார்க்க, காங்கிரஸ் கட்சியின் போக்கே புரிபடாமல் விழிக்கிறார்கள் அ.தி.மு.கவினர்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.நேற்று வரை, காங்கிரஸ் கட்சி என்பது அம்மாவின் கைப் பிடிக்குள் இருந்தது. இன்றுஆளாளுக்கு பேச ஆரம்பித்து விட்டார்கள். இதை விடப் போவதில்லை என்று ஒருபுறம் கர்ஜிக்கின்றனர்.

தலைவர்களின் நிலை இப்படியிருக்க, ஜெயலலிதா தரப்பிலிருந்து டெல்லியில் ஒருமுயற்சி நடந்தது. தனக்கு பிடிக்கவில்லை. சோனியாவிடம் சொல்லி இந்தஇளங்கோவனை முதலில் மாற்றுங்கள் என்று, டெல்லியில் இருந்த அ.தி.மு.கஎம்.பிக்களான பி.எச்.பாண்டியன், மலைச்சாமியிடம் சொல்லப்பட்டது.

சரி என்று இருவரும் சோனியாவை சந்திக்க அனுமதி கேட்க. இப்பொழுது முடியாதுஎன்ன விஷயம் என்று மட்டும் சொல்லுங்கள் என்று தான் சோனியாவின்உதவியாளர்கள் சொல்லியனுப்பினார்கள்.

இல்லை நாங்கள், எங்கள் அம்மா ஜெயலலிதா சொல்லியனுப்பிய விஷயங்களைஅவரிடம் தான் சொல்லமுடியும் என்று சொல்ல, கொஞ்சம் பொறுங்கள் என்று,திரும்பிய சோனியாவின் உதவியாளர்கள் எதுவாக இருந்தாலும் இப்பொழுது சந்திக்கமுடியாது என்று சொன்னவர்கள், விஷயம் எதுவாக இருந்தாலும் எங்களை கேட்டுவைக்கச் சொன்னார்கள் என்றும் சொல்ல, இளங்கோவன் போக்கு பேச்சு பற்றிஎடுத்துச் சொன்னார்களாம் எல்லாவற்றையும் தலையாட்டிக்கேட்டுக்கொண்டசோனியா காந்தியின் உதவியாளர்கள் , சோனியாவிடம் சொல்ல அங்கிருந்து எந்தரியாக்ஷனுமில்லையாம்.

இளங்கோவனுக்கு ஒரே ஒரு கருத்து மட்டும் எடுத்துச் சொல்லப்பட்டதாம். காங்கிரஸ்கட்சி பலமான கட்சி. எந்த சலசலப்புக்கும் அஞ்சாது என்று நினைத்துச்செயல்படுங்கள்.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறது. அதற்குள் எவ்வளவோ மாற்றங்கள்வரும். பொறுத்திருங்கள். தன்மானம் தான் முக்கியம் என்பதை மட்டும் நினைவில்கொள்ளுங்கள். யார் என்ன சொன்னாலும் டெல்லி தலைமை இப்பொழுது உங்களைஏற்றுக் கொண்டுவிட்டது. துணிவாக இருங்கள் என்றவர்கள். இதுவரை , தமிழகத்தில்ஒ!ன்று அ.தி.மு.க அல்லது தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருந்தோமே நமக்கு என்னகிடைத்தது?

நாளுக்கு நாள் இரண்டு திராவிட கட்சிகளும் நம் வளர்ச்சியை தடை செய்தார்களேஒழிய, ஆரோக்கியமாக வளர வழி செய்தார்களா? இல்லையே? என்றவர்கள்,மூப்பனார் மூன்றாவது அணி என்கிறாரே, அது நல்லதாகவே படுகிறது.ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தால் ஓட்டு, வெற்றி வாய்ப்பு இந்த மாதிரி பலலாபங்கள் இருந்தாலும் நாளை ஆட்சிக்கு வந்துவிட்டால் யாரையும் அவர்மதிக்கமாட்டார்.

பேசாமல் அ.தி.மு.க வை விட்டு , மூப்பனாருடன் கைகோர்த்தால் மக்கள் மத்தியில்மதிப்பும் கூடும். இமேஜையும் காப்பாற்றிக் கொள்ளலாம். என்று யோசித்தார்களாம்டெல்லியில்.

திராவிட கட்சிகளை மட்டும் சொல்ல முடியாது. இங்குள்ள காங்கிரஸ் தலைவர்களும்கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று இளங்கோவன் தரப்பில் சொல்லப்பட்டதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+