2-வது தற்கொலை முயற்சியில் வெற்றி" பெற்றவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல் தற்கொலை முயற்சியில் தோல்வி அடைந்தவர் இரண்டாவது முயற்சியில் உயிரிழந்தார்.

சென்னை செங்குன்றம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). டெய்லர் வேலை பார்த்தார். இவரது மனைவி சந்திரா. திருமணமாகி 9 ஆண்டுகள்ஆகின்றன. ஆனால், குழந்தைகள் இல்லை.

ஆறு மாதங்களுக்கு முன்பு சுரேசுக்கு விபத்து ஏற்பட்டு, கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடையாததால் டெய்லர் வேலைக்குசெல்ல முடியவில்லை.

இதனால் வேலையும் இல்லாமல், சிகிச்சையும் செய்ய முடியாமல் மிகவும் சங்கடப்பட்டார். அவரது குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது.அக்கம் பக்கம் கடன் வாங்கி சமாளித்துப் பார்த்தனர். முடியவில்லை.

குடும்ப கஷ்டம் உச்சக்கட்டத்தை எட்டிய போது விரக்தி அடைந்த சுரேஷ், கத்திரிக் கோலால் வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலை முயற்சியில்ஈடுபட்டார். அதனால் பலத்த காயமடைந்த சுரேஷ், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் பிழைத்துக் கொண்டார். மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உயிர் பிழைத்ததால் சந்தோஷம் அடையாத சுரேஷ், மீண்டும் தற்கொலை முடிவுக்கே போனார். இந்த முறை பிழைத்துக் கொள்ளக் கூடாது என்றமுடிவோடு மருத்துவமனையில் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+