ஆட்சியில் பங்கு தேவை ... த.மா.கா. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆட்சியில் பங்கு என்பது தான் த.மா.கா.வின் அரசியல் லட்சியம் என்று சிதம்பரத்தில்செவ்வாய் கிழமை கூடிய அக்கட்சியின் செயற்குழு பரபரப்புத் தீர்மானம்நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் "ஆட்சியை பங்கு போட முடியாது என்று சொன்ன அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு த.மா.கா.தனது திட்டவட்டமான முடிவைதெரிவித்துள்ளது.

கூட்டணி ஆட்சித் திட்டத்தோடு அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பிடித்தது த.மா.கா.ஆனால், அந்த திட்டத்தை அடியோடு நிராகரித்து விட்டார் ஜெயலலிதா.

கடந்த 23ம் தேதி சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் மூப்பனார்முன்னிலையில் இப்பிரச்னை பற்றி பேசிய ஜெயலலிதா, "அ.தி.மு.க. ஆட்சி என்பதுஎம்.ஜி.ஆர். ஆட்சி. அதை யாருடனும் பங்கு போட முடியாது. அப்படி பங்குபோடுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நெற்றியடியாக அறிவித்தார்.

ஜெயலலிதாவின் இந்த திடீர் பேச்சால் ஏற்பட்ட அரசியல் பரபரப்புக்கு மத்தியில்த.மா.கா.செயற்குழு செவ்வாய் கிழமை சிதம்பரத்தில் கூடியது.

கட்சியின் லட்சியக் கனவான கூட்டணி ஆட்சிக் கோரிக்கையை கூட்டணித் தலைவிஎன்ற முறையில் ஜெயலலிதா நிராகரித்து விட்ட சூழ்நிலையில், மூப்பனார் என்னமுடிவெடுக்கப் போகிறார் என்ற பெரிய கேள்விக்குறியோடு கூடிய இந்தசெயற்குழுவில், "ஆட்சியில் பங்கு கேட்பது தான் த.மா.கா.வின் அரசியல் நிலைஎன்பதை தெளிவுபடுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூப்பனார் தலைமையில் கட்சியின் முன்னணித் தலைவரான சிதம்பரம்முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட ஒரே அரசியல் தீர்மானம் இது தான். தீர்மானம்வருமாறு:

1996-ம் ஆணடில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தந்த பேராதரவின்காரணமாக காங்கிரஸ் தொண்டர்களின் ஒருமித்த விருப்பம் மற்றும் உழைப்பின்காரணமாக த.மா.கா. ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவாகியதன் விளைவாகதமிழகத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டது.

நேர்மையான நிர்வாகம், மதசார்பற்ற அரசியலை முன்னிறுத்தி, தமாகா மற்றும்தோழமை கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த தி.மு.க .தனதுஅதிகார பசிக்காக நெறி பிறழ்ந்தது மட்டுமல்லாது அவர்களது வெற்றிக்கு முக்கியகாரணமாக இருந்த த.மா.கா. மற்றும் மதசார்பற்ற இடதுசாரிகள்.

இந்தக் கட்சிகளின் தோழமையை ஒரு தலைபட்சமாக முறித்துக் கொண்டுபா.ஜ.க.வுடன் அரசியல் கூட்டணி வைத்துக் கொண்டது.

சந்தர்ப்பவாத அரசியலா அல்லது கொள்கை வழி அரசியலா என்ற கேள்விஎழுந்தபோது அதை பற்றி கவலைப்படாமல் தேசத்தின் எதிர்காலத்தையும்,தமிழ்நாட்டின் நல்வாழ்வை மட்டுமே கருத்தில் கொண்டு நெறி சார்ந்த அரசியலைவிட்டு விடாமல் த.மா.கா. தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

1998-99 பொதுத்தேர்தலுக்கு பிறகு மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுகின்ற அரசுகள்பின்பற்றி வரும் மக்கள் விரோத போக்கை கண்டித்து மதசார்பற்ற மற்ற எதிர்க்கட்சிகளோடு பேராாடி தொடர்ந்து ஒரு சிறந்த எதிர்க் கட்சியாக த.மா.கா. செயல்பட்டுவருகிறது.

மக்கள் விரும்பியதன் விளைவாக மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும்கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அவற்றின் செயல்பாடுகளும் நமது நாட்டில்கூட்டணி ஆட்சித் தத்துவம் வேரூன்றி வருவதை எடுத்துக் காட்டுகிறது.

தேர்தலுக்கு பிறகும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்என்பதே த.மா.கா வின் அரசியல் நிலை.

2001ல் வரவிருக்கிற தமிழக சட்டசபை தேர்தலை பொருத்தவரை த.மா.கா. அமைக்கஇருக்கிற தேர்தல் வியூகம் மதசார்பற்ற அரசியல் சக்திகளை ஒருங்கிணைப்பதோடுமட்டுமல்லாமல், நாம் மேலோ சொல்லியுள்ள இலக்கணங்களை கொண்ட ஒரு நல்லஅரசை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.

ஆட்சியிலும் அதிகாரத்திலும் அனைவருக்கும் பங்கு என்கிற த.மா.கா.வின் லட்சியமுழக்கம் 2001 தேர்தலுக்கு மட்டும் உருவாக்கப்பட்டதல்ல.

1999 தேர்தலின் போதே அடித்தட்டு மக்கள், பிற்படுத்தப்பட்ட, தலித் சிறுபான்மைமக்களோடு பங்கிட்டு கொள்வது தான் த.மா.க.ாவின் லட்சியம் என்றுதெளிவுபடுத்தியுள்ளது.

எல்லா தரப்பு மக்களையும் அனைவருக்கும் உரிய அதிகாரத்தை வழங்கிஒருங்கிணைக்கும் ஒரு திட்டம் ஒரு தேர்தலுக்காக உருவாக்கப்ட்ட அரசியல்கோஷமல்ல. மாறாக அது தான் த.மா.கா. வின் அரசியல் அடித்தளம்.

எனவே தமிழக மக்கள் நீண்ட காலமாக காத்திருக்கும் ஒரு சிறந்த திறமையானநேர்மையான ஊழலற்ற பொறுப்புள்ள தரப்பினரும் தங்களுக்குரியபிரதிநிதித்துவத்தை பெறவும் உத்தரவாதம் தரவும், சமூக நல்லிணக்கத்தில்நம்பிக்கையும் நாட்டம் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியல் ஒருமித்த கருத்தைஉருவாக்க அனைத்து முயற்சிகளையும் உருவாக்க வேண்டும் என்று இந்த செயற்குழுமூப்பனாரை கேட்டுக் கொள்கிறது என்று இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+