"சிறுவர்கள் பிச்சை எடுப்பது தவறல்ல
பெங்களூர்:
சிறுவர்கள் பிச்சை எடுப்பது பெரிய குற்றம் அல்ல என்று பிரபல சட்ட நிபுணரும் தேசிய சட்ட பள்ளிபல்கலைக் கழக இயக்குனருமான மித்ரா கூறியுளளார்.
பல்வேறு விதமான சூழ்நிலைகளில் வசிக்கும் சிறார்கள் குறித்த கருத்தரங்கு பெங்களூரில் நடந்தது. அதில்துவக்கவுரையாற்றி மித்ரா பேசியதாவது:
அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட, நிராதரவான சிறுவர்கள் பிச்சை எடுப்பதில் தவறில்லை. அதுபெரிய குற்றமும் கிடையாது. ஆனால் பிச்சை எடுக்க தடை விதித்து சட்டம் உள்ளது. இந்த சட்டத்தைஎதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் யாராவது வழக்குத் தொடர்ந்தால், சட்டம் காணாமல் போய் விடும்.துரதிர்ஷ்டவசமாக கடந்த 35 வருடமாக யாரும் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டை அணுகவில்லை.
பிராமண சமூகத்தில், பிரம்மச்சரியத்தின் ஒரு பகுதியாக, பிச்சை உள்ளது. பிச்சை எடுத்துத்தான் அவர்கள்சாப்பிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆதரவற்ற நிலையில் இருக்கும் சிறுவர்கள் பிச்சை எடுப்பதை தடுப்பது மனித உரிமைக்கு புறம்பானது.சந்தர்ப்ப சூழ்நிலையே சிறுவர்களை பிச்சை எடுக்கத் தூண்டுகிறது. அவர்களுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறிஅவர்களை எந்த விதமான வசதியும் இல்லாத விடுதிகளில் அடைத்து வைப்பது மிகவும்கொடுமையானது.
பிச்சை எடுக்கும் சிறுவர்களை இளம் குற்றவாளிகள் எனக் கூறவது தவறு. அவர்கள் ஆதரவற்றசிறுவர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும். இந்தியாவில் தெருக்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்களில்98 சதவிகிதம் பேர் ஆதரவற்றவர்கள்தான்.
மேற்கு வங்காளத்தில் ஒரு சிறுவன் தனது முதலாளியிடமிருந்து சாப்பாட்டுப் பொருளை திருடியதற்காக அந்தசிறுவன் 24 மணி நேரம் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். அது மிகவும் தவறானசெயலாகும்.
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள சிறுவர்கள் சீரமைப்புத் திட்டம், முதலில் சீரமைக்கப்படவேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications