ரூ. 1 கோடி போதைப் பொருள் பறிமுதல்
திருச்சி:
மும்பையைச் சேர்ந்த வாலிபரைக் கைது செய்த திருச்சி போலீஸார், ரூ. 1 கோடி மதிப்புள்ள பிரவுன் சுகர் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து திருச்சி நகர காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
திருச்சியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து திருச்சி போதைப் பொருள்கடத்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதரன் போலீஸ் படையுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது, திருச்சியில் உள்ள கரூர் பைபாஸ் ரோடு மேம்பாலம் அருகில் சந்தேகப்படும் வகையில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீஸார் பிடித்துசோதனை செய்தனர்.
அவரிடம் 1 கிலோ பிரவுன் சுகர் இருந்ததைப் போலீஸார் கண்டு பிடித்தனர். அதை அவர் கடத்திச் சென்றதாகத் தெரிவித்தார். சர்வதேச சந்தையில், இந்தபிரவுன் சுகரின் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும்.
பிடிபட்ட வாலிபரின் பெயர் மூர்த்தி, மும்பையைச் சேர்ந்தவர் தற்பொழுது சேலத்தில் குடியிருப்பதாக தெரிகிறது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து, திருச்சிநீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications