For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பக்தர்களின் நண்பர் பிள்ளையார்

By Staff
Google Oneindia Tamil News

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 1-09-2000, வெள்ளிக்கிழமை அன்றுகொண்டாடப்படுகிறது.

விநாயகர் சிவ பெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் பிறந்த முதல் குழந்தையாவார். இவருக்கு விக்ன விநாயகர்( குறைகளை போக்குபவர்), முழு முதல்கடவுள் என்ற பெயர்களும் உண்டு.

ஆவணி மாதம் வளர் பிறையில் சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்னால் விநாயகரைத் துதித்து விட்டு தொடங்கினால் அந்த காரியம் எந்த தடையும் இல்லாமல் நிறைவேறும்என்பது உறுதி.

விநாயகரின் லீலைகள் பற்றி சில புராணக் கதைகள்:

தென்னகத்தில் பிரும்மச்சாரியாக வணங்கப்படும் வட நாட்டில் சித்தி, புத்தி என்ற இரு மனைவியருடன் காட்சியளிக்கிறார். கந்த புராணக் கதைப்படி கஜமுகன்என்ற அரக்கனை அழித்ததால் இவருக்கு கஜானனன் என்ற பெயரும் உண்டு.

யானைத் தலையுடன் கூடிய அரக்கன் தேவர்களுக்கெல்லாம் தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள் சிவபெருமானிடம் தங்களை காத்து அருளுமாறுமுறையிட்டனர். அவர் விநாயகரை அழைத்து கஜமுக அரக்கனை அழித்து வருமாறு கூறினார்.

சிவ பெருமான் அனுப்பிய பூத கணங்களுடன் சென்று கஜமுகனை அழித்து வந்தார். அதற்கு பிரதியாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை திருமணம் செய்துகொடுத்தனர். சித்தி என்றால் நினைத்த காரியத்தை முடித்தல். புத்தி என்றால் அறிவு .

விநாயகருக்கு நிவேதனங்களில் முக்கியமானது மோதகம் எனப்படும் கொழுக்கட்டையாகும். கொழுக்கட்டை என்பது அரிசி மாவினால் கூடு போல்செய்து அதில் இனிப்புப் பூரணம் வைத்து அதை வேக வைத்து செய்யப்படுவது. நிவேதனப் பழங்களில் குறிப்பிடத்தக்கவை விளாங்கனி, நாவல் பழம்,வாழைப்பழம் ஆகியவை ஆகும்.

விநாயகர் சதுர்த்தியன்று செய்யப்படும் பூஜையன்று மட்டும் துளசி சேர்த்துக் கொள்ளப்படும்.

இதற்கான புராணக் கதை:

துளசி தேவி விநாயகரை மணம் புரிய விரும்பி வெகு காலம் தவம் புரிந்து வந்தாள். விஷ்ணுவுக்குத்தான் நீ மனைவியாக வேண்டும் என பல முறை கூறியும்அவள் விநாயகரையே மணக்க விரும்புவதாக கூற சினமுற்ற விநாயகர் துளசியை செடியாக போகுமாறு சபித்து மேலும் எனது நித்திய பூஜைக்கு நீஅருகதையற்றவளாவாய் என்றும் சாபம் அளித்தார்.

பின் அவள் மேல் இரக்கம் கொண்டு விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் எனக்கான பூஜையில் சேர்த்துக் கொள்ளப்படுவாய் எனக் கூறினார்.அதனால்விநாயக சதுர்த்தியன்று துளசி சேர்த்து பூஜை செய்வது சிறந்தது.

சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு பூஜை செய்ய சிறந்த நாள்களில் ஒன்றாகும். நமது சங்கடங்களை ( கஷ்டங்களை) தீர்க்க வேண்டி பூஜை செய்யும் போது நமதுசங்கடங்களை தீர்த்து வைப்பதால் அன்றைய தினத்திற்கு சங்கடஹர சதுர்த்தி எனப் பெயர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X