எடுத்துப் போன பொருட்களைத் திருப்பிக் கொடுத்த திண்டிவனம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, கட்சி அலுவலகத்திலிருந்து எடுத்துச் சென்றபொருட்களை மீண்டும் கட்சியிடமே ஒப்படைத்தார் திண்டிவனம் ராமமூர்த்தி.
சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சித் தலைமை திண்டிவனம் ராமமூர்த்தியை கட்சித் தலைவர் பதவியிலிருந்துநீக்கிவிட்டு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமித்தது.
தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி, கட்சி அலுவலகத்திலிருந்த மேஜைகள், கம்ப்யூட்டர்சாதனங்கள், முக்கிய தஸ்தாவேஜூகளை எடுத்துச் சென்றார்.
இதையடுத்து, புதிய தலைவர் இளங்கோவன் கட்சித் தலைமையிடம் செய்த புகாரின் அடிப்படையில், கட்சி சார்பில்திண்டிவனம் ராமமூர்த்திக்கு விளக்கம் கேட்டு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியது.
இதற்குப் பதில் தெரிவித்த திண்டிவனம் ராமமூர்த்தி, கட்சி தொடர்பான பொருட்கள் அனைத்தையும் விரைவில்திருப்பி ஒப்படைப்பதாகத் தெரிவித்தார். அதன்படி, ராமமூர்த்தி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தண்டாயுதபாணி,செழியன் ஆகிய இருவரும் கட்சிப் பொருட்களை புதிய தலைவர் இளங்கோவனிடம் ஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications