அச்சத்தில் கர்நாடக எல்லைப் பகுதி தமிழர்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமார் இன்னும் விடுவிக்கப்படாததால், காவிரி கலவரம் போல் மறுபடியும் கலவரம் ஏற்பட்டுவிடுமோஎன்ற அச்சத்தில் கர்நாடக எல்லைப்பகுதிகளில் வாழும் தமிழர்கள் உள்ளனர்.

நடிகர் ராஜ்குமார் கலவரத்தால் மிகப்பெரிய அளவில் கலவரம் எதுவும் ஏற்படவில்லையென்றாலும், ராஜ்குமார்கடத்தலுக்குப் பின் மைசூர்-கோயம்புத்தூருக்கு இடையே வாகனப் போக்குவரத்து குறைந்து விட்டது. தமிழக அரசுபஸ்களும் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. இதனால் கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்கள்அனைவரும் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

குறிப்பாக, சாம்ராஜ்நகர், சத்யமங்கலம் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து குறைந்துள்ளது. தெருவோர உணவுவிடுதிகள் மூடப்பட்டுள்ளன. சாம்ராஜ்நகர், ஹனசூர், தாளவாடி பகுதிகளில் பல டிராக்டர்கள் வாகனங்களில் நம்பர்பிளேட்டுகள் இல்லாமல் இயக்கப்படுகின்றன.

சாம்ராஜ்நகர்-சத்யமங்கலம்த்திற்கு இடையே பஸ் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் ஈரோடு மாவட்டவியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்திக்கென்று வந்த பொருட்கள் சேரவேண்டியஇடங்களுக்குப் கொண்டு போக முடியவில்லை. மஞ்சள் பயிர்களின் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி கலவரம் ஏற்பட்ட போது சாம்ராஜ்நகர், மைசூர் மாவட்டங்களில் வாழும் மக்கள் அதிக அளவுபாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது ராஜ்குமாரை விடுவிப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் சாம்ராஜ் நகரில்வாழ்பவர்கள் பயத்தில் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

நாகவள்ளி, நெல்லூர், ஈபோரு, தோலிபுரா, செம்புசூர் பகுதிகளில் வாழும் தமிழர்கள், அங்கிருந்து தங்கள் சொந்தஊருக்குத் திரும்பியுள்ளனர். ராஜ்குமார் பத்திரமாக ஊர் திரும்பியபின் தான் அவர்கள் மீண்டும் இங்குவருவார்கள்.

ராஜ்குமாரை விடுவிப்பதற்காக இரு மாநில அரசுகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை காவிரிகலவரத்தின் போது பாதிக்கப்பட்ட தமிழர்கள், பாராட்டி திருப்தி தெரிவித்துள்ளனர்.

சிக்கஒளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் கன்னடர்கள் வீரப்பனின் செயலுக்காக நாம் ஏன்சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறி தமிழர்களுக்குத் தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகின்றனர்.

தமிழர்களின் கவலைகளினால் அன்றாட வாழ்க்கை பீதியோடு நகர்கிறது. ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட பின்புதான்இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+