ராஜ்குமார் விரைவில் வருவார் .. கர்நாடக அமைச்சர் நம்பிக்கை
பெங்களூர்:
சந்தன வீரப்பன் பிடியில் உள்ள கன்னட நடிகர் ராஜ்குமாரும் மற்ற 3 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புவதாக கர்நாடக உள்துறைஅமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
பெங்களூரில் நிருபர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியில் உள்ள ராஜ்குமார் உள்பட 4 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். வீரப்பனைச் சந்திக்கமூன்றாவது முறையாக நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்றுள்ளார்.
தமிழக அரசுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டு சமீபத்திய நிலவரத்தைக் கேட்டு வருகிறோம். வீரப்பனைச் சந்திக்கச் சென்றுள்ளநக்கீரன் கோபால் இந்த முறை நிச்சயம் ராஜ்குமாரையும் மற்றவர்களையும் மீட்டு வருவார் என்று எதிர்பார்க்கிறோம்.
வீரப்பனின் கோரிக்கைகளுக்கு இணங்க 51 தடா கைதிகளையும் விடுதலை செய்ய கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தாக்கல் செய்துள்ள மனுவுக்கு கர்நாடக அரசு விரைவில் பதில் மனு தாக்கல் செய்யும் என்றார் கார்கே.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications