வாரியாருக்கு மணிமண்டபம் .. திறக்கிறார் கருணாநிதி
சென்னை:
கிருபானந்த வாரியார் மணி மண்டபத்தை வரும் 2 ம் தேதி வேலூரில் முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தராகத் திகழ்ந்தவர். இவரது சொற்பொழிவுகள் பொதுமக்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும்.
இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டத்திலுள்ள காங்கேய நல்லூர். இவர் இறந்த பிறகு அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரப்பட்டது.
அதன்படி, வாரியாரின் ஞானத் திருவளாகம் திறப்பு விழா மற்றும் பெருஞ்சாந்தி விழா வரும் 2 ம் தேதி மாலை வேலூர் மாவட்டம் காங்கேயத்தில்நடக்கவுள்ளது.
இந்த மணிமண்டபத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார். மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம், மற்றும் மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டுபேசுகின்றனர். இரவு 9 மணிக்கு விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடக்கிறது.
அடுத்த நாள் காலை வாரியாரின் 95 வது அவதார விழா நடக்கிறது. கோவை பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமையில் நடைபெறும்.இவ்விழாவில் நடிகர் எஸ்.வி.சேகரின் அல்வா என்ற நகைச்சுவை நாடகம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications