கொல்லப்பட்ட மேலவளவு தலித்களுக்கு மணி மண்டபம்
மதுரை:
மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தில், படுகொலை செய்யப்பட்ட 7 தலித்களின் நினைவாக புதன்கிழமை மணிமண்டபம் திறக்கப்படவுள்ளது.இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலவளவு கிராம பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்பட 7 பேரை, மற்றொரு வகுப்பைச் சேர்ந்த சிலர், 1997-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம்தேதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதில் இறந்தவர்களின் நினைவாக மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தைஅந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமாவளவன் திறந்து வைக்கிறார். ரூ. 5 லட்சம் மதிப்பில் இது கட்டப்பட்டுள்ளது.
பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் இந்த நிகழ்ச்சியின்போது அசம்பாவிதச் சம்பவஙகள் நடந்து விடக் கூடாது என்பதற்காக, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலவளவைச் சுற்றிலம் பல செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு போலீஸார் கண்காணித்து வருகின்றனர். மொத்தம் 1000 போலீஸார்பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications