For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வன்...

By Staff
Google Oneindia Tamil News

பிள்ளையார் பட்டியில் இத்திருவிழா 10 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. விநாயகர் சதுர்த்திக்கு 9 நாட்கள் முன்பாக காப்புக்கட்டிக்கொடியேற்றித் திருவிழா தொடங்கப்படுகிறது.

ஒவ்வொரு நாள் இரவிலும் விநாயகர் மூஞ்சூர், சிம்மம், பூதம், கமலம், இடபம், யானை. பெருச்சாளி, மயில், குதிரை வாகனங்க ளில் திருவீதி உலாநடைபெறும்.

கற்பக விநாயகருக்கு, சதுர்த்தியன்று 18 படி அரிசி மாவினால் செய்யப்படும் ஒரே கொழுக்கட்டை நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறையில் வருகிற சதுர்த்தியன்று விடியற்காலையில் எழுந்து நீராடி, பட்டாடை உடுத்தி, ரத்ன கலச ஸ்தாபனம் செய்து,கும்பத்தில் விநாயகரை வணங்கி, கரும்பு, விளாம்பழம், சர்க்கரை, பலாப்பழம் ஆகியவற்றை நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.

பகலில் ஒரு வேளை உண்டு, இரவில் பால் அல்லது பழம் மட்டும் உண்டு விரதம் இருத்தல் வேண்டும். அன்று இரவு சந்திரனைப் பார்க்கக் கூடாது.சதுர்த்தியன்று விரதம் இருந்து வரும் பக்தர்கள் அதனை நிறைவு செய்யப் பிள்ளையார்ப்பட்டி வருவர்.

ஓராண்டுச் சதுர்த்தி நோன்பு விரதத்தை இங்கு நிறைவு செய்பவர்கள் கேட்ட வரம் கிடைக்கின்றது என்பது நடைமுறையில் கண்ட உண்மையாகும்.

கும்பாபிஷேக விழா:


இந்தக் கோயிலில் 5முறை கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. 8.11.1992-ம் அன்று ஐந்தாவது கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


இதுவரை நடைபெற்றுள்ள நன்னீராட்டுகளிண் விவரம்:

திருக்குட நன்னீராட்டுகள் தமிழ் ஆண்டு மாதம்/நாள் ஆங்கில ஆண்டு
முதலாவது விளம்பி தை 10 21.11.1899
இரண்டாவது பிரபவ தை 28 10.02.1928
மூன்றாவது விக்ருதி தை 29 16.02.1951
நான்காவது நள ஆவணி 25 10.09.1976
ஐந்தாவது ஆங்கில ஐப்பசி 08.11.1992

தலவிருட்சம், தல தீர்த்தம்:

இக் கோயிலின் தல விருட்சமாக மருதமரம் திகழ்கிறது. இங்குள்ள சிவ பெருமானின் திருப்பெயரோடுதலவிருட்சம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

பிள்ளையார்பட்டியின் பழமையான பெயர்களில் மருதங்குடி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தலத்தீர்த்தமாக கற்பக விநாயகரின் ஆலயத் திருவாயில் முன்புள்ள திருக்குளம் அமைந்துள்ளது.

தலத்தின் தனித் தன்மைகள்:

குடைவரைக் கோயிலுள்ள விநாயகரின் சிற்ப அமைதியையும், பழமையான கல்வெட்டினையும் கொண்டுஉலகின் முதன்மையான விநாயகர் கோயிலாகப் பிள்ளையார்பட்டி கற்பர விநாயகர் கோயில் திகழ்கிறது.

இங்குள்ள விநாயகர் வடக்கு நோக்கியவாறு தனது கரத்தில் லிங்கத்தை வைத்து அமர்ந்த நிலையில்உலக நன்மைக்குத் தவம் புரியும் திருக்கோலத்தை வேறு எங்கும் காண இயலாது.

Vinayakarவிநாயகரின் தும்பிக்கை வலப்புறமாக ஓம் எனும் பிரணவத்தைப் போல அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். விநாயகரின் திருமுகத்துடன் கூடிய வலப்புறத் தும்பிக்கை, ஓங்காரத்தை வலியறுத்துகிறது.

மடைப்பள்ளி அருகில் உள்ள சுனை சார்ந்த அரச மரவேர்களுக்கு இடையே ஒரு லிங்கம் முளைத்துவருவதாகக் கூறப்படுகிறது. இதனை பெருந்திரளான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த மரத்தடியில் உள்ள நாகலிங்கத்தை வழிபட்டால் நீண்ட நாள்களாகத் தடைப்பட்டு வந்த திருமணம்,பிள்ளைப் பேறின்மை ஆகியவை நீங்கும். இதனை அவ்வரச மரத்தில் கட்டப்பெற்ற மஞ்சள்கயிறுகளும், தொட்டில்களுமே உறுதி செய்கின்றன.

இங்குள்ள நடராஜரின் செப்புத் திருமேனியில் உள்ள டமாரத்தைத் தட்டினால், உண்மையான டமாரத்தின் ஒலிகேட்கிறது.

Vinayakar-Artஅலங்கார மண்டபத்தில் உள்ள விநாயகர் ஓவியம் எங்கு நின்று பார்த்தாலும் நம்மை பாரப்பது போலஅமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.

பிள்ளையார்பட்டியில், வேத, ஆகமங்களைக் கறிபிக்கும் வேத ஆகமப்பாட சாலையும், சிவநெறிக்கழகமும் இருப்பதால், எந் நேரமும் வேத ஆகமங்களின் ஒலி கேட்கிறது. ஆகையால் இறைவனின்சக்தி பெருகிக் கொண்டே வருகிறது. இதனால் தினசரி வருகிற பயணிகளின் எண்ணிக்கையும் மிகுந்துபிள்ளையார்ப்பட்டி தெய்வீக சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.

(கட்டுரையாளர் சி. சிதம்பரம், கரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையில் முனைவர்(டாக்டர்) பட்ட ஆய்வாளராக உள்ளார்.)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X