படிப்புக்குத் தடையாகும் ஏழ்மை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய அரசின் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அடுத்தபடியாக அதிக நிதி ஒதுக்கப்படுவது கல்வித் துறைக்குத்தான்.

நாட்டில் அனைவருக்கும் கல்வி புகட்டவேண்டும், அதுவும் இலவசக் கல்வி அளிக்கவேண்டும் என்பதுதான் மத்திய அரசின் திட்டம்.

தனியார் பள்ளிகளில் பீஸ் கட்டி படிக்க முடியாதவர்களுக்காகத்தான் மத்திய, மாநில அரசுகளே பள்ளிகள் கட்டி அங்கு இலவசக் கல்வியை அளிக்கின்றன.

ஆனால், நல்ல படிக்கும் திறன் இருந்தும் பீஸ் கட்டமுடியாத நிலையில் தனியார் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட சகோதரிகள் இருவரை சேர்த்துக் கொள்ள அரசுப்பள்ளிகளே மறுத்து வருகின்றன.

டெல்லியில் ஜஹாங்கீர்புரியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் சக்தேவா. தினக் கூலியான இவர் தனது இரு மகள்கள் நீதா (13), ஷோபா (12) இருவரையும்நன்றாகப் படிக்க வைக்கவேண்டும் என்ற ஆசை.

தனது சக்தியையும் மீறி அதே பகுதியில் உள்ள நவ் ஜீவன் மாதிரிப் பள்ளியில் மகள்களைச் சேர்த்தார். அவர்களும் தந்தையின் கஷ்டத்தை உணர்ந்து நன்றாகப்படித்தனர். கடுமையாக உழைத்து மாதம் தவறாமல் பீஸ் கட்டி வந்தார் ரமேஷ் குமார்.

ஆனால், திடீரென்று அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் வருமானம் இல்லாமல்அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகிய நிலையில், மகள்களின் படிப்புக்கு மாத பீஸ் கட்ட முடியாமல் போனது.

கடந்த சில மாதங்களாக பீஸ் கட்டாததை அடுத்து பள்ளியில் இருந்து நீதாவும், ஷோபாவும் நீக்கப்பட்டனர். நீதா 8-ம் வகுப்பும், ஷோபா 7-ம் வகுப்பும்படித்து வந்தனர். பீஸ் கட்டாததால் டி.சி. மற்றும் மதிப்பெண் பட்டியலைக் கொடுக்க பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது.

மாணவிகளின் தந்தை ரமேஷ் குமார் பல முறை பள்ளி நிர்வாகத்தை அணுகி டி.சி.யையும் மதிப்பெண் பட்டியலையும் கொடுக்கும்படி கேட்டும் அவற்றைக்கொடுக்க மறுத்துவிட்டது பள்ளி நிர்வாகம்.

இதையடுத்து அரசுப் பள்ளியில் தனது மகள்களைச் சேர்க்க ரமேஷ் முடிவு செய்தார். பல பள்ளிகளை அவர் அணுகினார். ஆனால், டி.சி.யும், மதிப்பெண்பட்டியலும் இல்லாமல் சேர்த்துக் கொள்ள முடியாது என்று அப் பள்ளிகளும் கூறிவிட்டன.

மீண்டும் நாங்கள் எங்களது முந்தைய வகுப்பின் இறுதி ஆண்டுத் தேர்வை எழுதத் தயாராக உள்ளோம். எங்களை பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றுஅந்த மாணவிகள் கூறியும் அப் பள்ளிகள் அவர்களை சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டன.

நல்ல படிக்கும் திறமையுள்ள மாணவிகள் இப்போது பள்ளியில் சேர முடியாத நிலையில் பரிதவிக்கின்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+