இலங்கைக்கு போப்பா வீரப்பா ... கூறுகிறார் சுவாமி
சென்னை:
சந்தன கடத்தல் வீரப்பன் உடனடியாக யாழ்ப்பாணம் சென்று இலங்கை ராணுவத்திற்குஎதிராக போரிட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசுவாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து சாமி வெளியிட்ட அறிக்கை:
விடுதலைப்புலிகளுடனும், தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழ் தேச மீட்புப்படையுடனும் தற்போது கை கோர்த்துக் கொண்டுள்ள வீரபப்பன், இலங்கையாழ்பாணத்தில் மடிந்து வரும் தமிழ் சமுதாயத்தைக் காப்பாற்ற உடனடியாகயாழ்ப்பாணம் செல்ல வேண்டும்.
இலங்கை ராணுவத்திற்கு எதிராக போரிட இளைஞர்கள் கிடைக்காமல், எட்டு வயதுமுதல் 12 வயதுள்ள சிறுவர்களை புலிகள் போரில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதுதொடருமேயானால் இலங்கையில் தமிழ் இனமே இல்லாமல் போய் விடும் அபாயம்எழுந்துள்ளது.
தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் நீதிக்கும் பாடுபடுவதாக கூறும் சந்தனக் கடத்தல்வீரப்பன் இந்த சமயத்தில் யாழ்ப்பாணம் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.
எங்களுக்கு விடுதலைப் புலிகள் தான் முக்கியம் என்று கூறும் வீரமணி, ராமதாஸ்,வைகோ, நெடுமாறன் போன்றவர்களையும் வீரப்பன் உடன் அழைத்துச் செல்லவேண்டும்.
இந்தியாவில் தமிழ்மொழிக்கு இந்திய அரசியல் சட்டத்தில் போதிய பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது அதற்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் வீரப்பன் இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை. அவர் யாழ்பாணத்தில்இருக்க வேண்டிய ஆள். எனவே உடனே அவர் கிளம்ப வேண்டும் என்று கூறியுள்ளார்சாமி.












Click it and Unblock the Notifications