ராபின் தலைமையில் இலங்கை செல்லும் தமிழக கிரிக்கெட் அணி
சென்னை:
இலங்கையில் நடைபெற உள்ள கோபாலன் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 20 பேர் கொண்ட தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 1982-ம்ஆண்டுக்குப் பிறகு இந்த கோபாலன் கோப்பை கிரிக்கெட் போட்டி இப்போது நடத்தப்பட உள்ளது.
தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே விளையாட்டுத் துறையில் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இப் போட்டி நடத்தப்படுகிறது. இப் போட்டியில்தமிழக கிரிக்கெட் அணியும், இலங்கை கிரிக்கெட் அணியும் மோதும்.
தமிழக அணிக்கு இந்திய அணி வீரர் ராபின் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எஸ். ஸ்ரீராம் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிவீரர்களான சடகோபன் ரமேஷ், ஹேமங் பதானி ஆகியோரும் தமிழக அணியில் இடம் பெற்றுள்ளனர்.
செப்டம்பர் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழக அணி அங்கு, ஒரு 3 நாள் ஆட்டம் மற்றும் 3ஒருநாள் ஆட்டங்களில் விளையாட உள்ளது.
அனைத்து ஆட்டங்களும் கொழும்பில் நடைபெறும். அக்டோபர் முதல் தேதி தமிழக அணி தாய்நாடு திரும்பும். அணி விவரம்:
ராபின் சிங் (கேப்டன்), எஸ். ஸ்ரீராம் (துணை கேப்டன்), எஸ். ரமேஷ், எஸ். சரத், ஹேமங் பதானி, ரூபன் பால், ஆஷிஷ் கபூர், எஸ். மகேஷ், கோகுலகிருஷ்ணன், டி.குமரன், ரஜத் பாட்டியா, பாலாஜி ராவ், ஸ்ரீநிவாஸ், பத்ரிநாத், ஹேமந்த் குமார், சதீஷ், வசந்த் சரவணன், மதனகோபால், விக்ரம் குமார், வித்யுத்சிவராமகிருஷ்ணன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications