சாதனை படைக்குமா இங்கிலாந்து?
லண்டன்:
மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமைதொடங்குகிறது.
இத் தொடரில் 4 டெஸ்டுகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. 1969-ம் ஆண்டுக்குப் பிறகு மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றதில்லை.
2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. 5-வது டெஸ்டை வென்றாலோஅல்லது டிரா செய்தாலோ போதும் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றுவிடும்.
ஹெட்டிங்கிலியில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் 2-வது நாளிலேயே இங்கிலாந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து வீரர்கள் டேரன் கோமற்றும் கேட்டிக், ஒயிட் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்துக்கு அந்த வெற்றி கிடைத்தது.
இந்தத் தொடர் முழுவதும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசி வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் ஆசையில்இங்கிலாந்து கேப்டன் நாஸர் ஹுசேன் உள்ளார்.
அதே நேரத்தில் மேற்கிந்தியத் தீவுகளும் டெஸ்ட் தொடரை இழக்கக்கூடாது என்பதில் முனைப்பாக உள்ளது. பேட்டிங்கில் அந்த அணி சோபிக்காதபோதிலும் வால்ஸ், ஆம்புரோஸ் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் அந்த அணி ஒரு டெஸ்டை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட்தான் தனது கடைசி டெஸ்ட் என்றும், அதன்பிறகு ஓய்வு பெறப்போவதாகவும் ஆம்புரோஸ் அறிவித்துள்ளார். தனது கடைசி டெஸ்ட்டைமேற்கிந்தியத் தீவுகளுக்கு வெற்றியாக்கித் தரவேண்டும் என்பதில் அவர் மும்முரமாக உள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பிரையன் லாரா 4 டெஸ்டுகள் எதிலும் சோபிக்கவில்லை. கடைசி டெஸ்டில் அவர் சிறப்பாகவிளையாடி அணிக்கு வெற்றி தேடித் தருவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications