கபில்தேவ்- கிரிக்கெட் வாரியம் இடையே பனிப் போர் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கபில்தேவுக்கும், இந்திய கிரிக்கெட்வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையாவுக்கும் இடையே பனிப்போர் தீவிரமடைந்துள்ளது.

தன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட பிறகு அதை எல்லாம் திட்டவட்டமாகமறுத்த கபில்தேவ் சில நாட்களுக்குப் பிறகு நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் அவருக்கும் கிரிக்கெட் வாரியத்துக்கும்இடையே உள்ள கருத்துவேறுபாடுகள் வெளிச்சம் போட்டுக் காட்டின.

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் இடம்பெறவேண்டும். இப்போது தொழிலதிபர்களால் அதிகம இடம் பெற்றுள்ளனர்.கிரிக்கெட்டைப் பற்றி ஒன்றுமே தெரியாத அவர்களால் கிரிக்கெட்டைஒழுங்குபடுத்தமுடியாது.

கிரிக்கெட் என்றால் என்ன என்பதே தெரியாத அவர்களால் கிரிக்கெட் விளையாட்டமேம்படுத்தமுடியாது என்று காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்தார் கபில்தேவ்.

தனது மனதுக்குள் இருக்கும் எதையும் பின்னால் ஏற்படும் பிரச்சினைகளைக் கருத்தில்கொள்ளாமல் வெளியே கொட்டிவிடும் சுபாவம் கபில்தேவுக்கு. ஆனால், கபில்தேவின்அந்த செயல் அவருக்கே பிரச்சினையாகி விடுமோ என்று தெரிகிறது.

கபில்தேவ் இப்படி தெரிவித்த கருத்துக்கள் பற்றி வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையாவிடம் (இவருக்கும் கிரிக்கெட்டுக்கும் தொடர்பு இல்லை, இவர் ஒருதொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது) கேட்டபோது, கபில் தேவ் அப்படிகூறியதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அவரிடம் பேசி அதற்கானகாரணத்தை அறிவேன் என்றார்.

அதன்படி சமீபத்தில் டெல்லி சென்ற முத்தையா, அங்கு கபில்தேவைச் சந்தித்தார்.ஆனால், கபில்தேவோ மும்பைக்குச் செல்லும் அவசரத்தில் இருந்தார். இதனால், அச்சந்திப்பு சில நிமிடங்களே நடந்தது.

விரைவில் மீண்டும் பேசுவது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டனர். ஆனால்,இதுவரை இரண்டாவது சந்திப்பு நடைபெறவில்லை. அடுத்த சந்திப்புக்கான தேதியும்அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, கபில்தேவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனைமேற்கொண்டனர். கிரிக்கெட் விளையாட்டில் அவர் ஊழல் செய்து சம்பாதித்த பணம்குறித்துத்தான் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்பட்டது.

ஆனால், இதை கபில்தேவ் மறுத்துள்ளார். எனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைஎனது தொழில் தொடர்பாகவே தவிர கிரிக்கெட் தொடர்பாக அல்ல என்றார்கபில்தேவ்.

இச் சோதனையைக் காரணம் காட்டி கபில்தேவ் ஊழல் புரிந்துவிட்டார் என்றும் இந்தியஅணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் மத்தியவிளையாட்டுத் துறை அமைச்சர் தீன்ஷா உள்பட பலர் கோரினர்.

ஆனால், அதற்கும் கபில்தேவ் மறுப்பு தெரிவித்தார். நான் எந்த குற்றமும்செய்யவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளராக நான் இரண்டு ஆண்டுகளுக்குநியமிக்கப்பட்டேன். இன்னும் எனக்கு ஓராண்டு பதவிக்காலம் இருக்கிறது.

நானாக பதவி விலகமாட்டேன். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவுசெய்து என்னை பதவி விலகும்படி கேட்டுக் கொண்டால் பதவி விலகுவேன்.அதுவரை பதவி விலகமாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.

கபில்தேவ் கூறிய குற்றச்சாட்டுகளால் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையாசற்று வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கபில்தேவும் தனது பயிற்சியாளர்பதவியின் எதிர்காலம் வாரியத்தின் கையில்தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

அடுத்து யார் என்ன சொல்வார்கள், என்ன செய்வார்கள் என்ற நிலையில்கபில்தேவுக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே பனிப் போர் நடைபெற்றுவருகிறது. இந்த பனிப்போருக்கு எப்போது முடிவு தெரிகிறதோ அப்போதுதான்இந்திய கிரிக்கெட் அடுத்த அடியை எடுத்து வைக்கும்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+