ஐ.நா.கூட்டத்தில் இன்று பேசுகிறார் வாஜ்பாய்
நியூயார்க்:
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் வாஜ்பாய் அங்கு நடக்கும் ஐ.நா. சபையின் மில்லனியம் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசுகிறார்.
பிரதமர் வாஜ்பாய் 13 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடந்து கொண்டுள்ள ஐ.நா.சபையின் மில்லினியம் வருட கூட்டத்தில்கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை உரையாற்றுகிறார்.
அணு ஆயுத சோதனை, காஷ்மீர் பிரச்சினை என முக்கியமான பின்னணியில் வாஜ்பாயின் உரை முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே வியாழக்கிழமைபேசிய பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவைக் குற்றம் சாட்டிப் பேசியுள்ளார். அதற்கு வாஜ்பாய்உரையில் பதில் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில், ஐ.நா.சபைக் கூட்டத்தில் பேசுவோரின் பட்டியலில் வாஜ்பாய் பெயர் 30-வதாக இருந்தது. தற்போது அதற்கு முன்னதாகவே அவர் பேசுவார்என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை. வாஜ்பாயின் உடல்நிலை காரணமாக அவர் முன்னதாக பேசஅனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
தனது சுற்றுப்பயணத்தின்போது நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் வாஜ்பாய் சந்தித்துப் பேசத்திட்டமிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை பேஷன் டெக்னாலஜி வளாகத்தில் நடக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இரண்டு புத்தகங்களை வாஜ்பாய்வெளியிடுகிறார். அதே இடத்தில் உலக ஆயுர்வேதக் கருத்தரங்கத்தையும் தொடங்கி வைக்கிறார்.
பின்னர் ஸேட்டன் தீவு செல்கிறார். அங்கு அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
செப்டம்பர் 13 ம் தேதிவரை நியுயார்க்கில் இருக்கும் பிரதமர் வாஜ்பாய், அன்று தலைநகர் வாஷிங்டன் செல்வார். அங்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின்காங்கிரஸ் சபையில் உரையாற்றுகிறார். பின்னர், அமெரிக்க அதிபர் கிளின்டனை சந்தித்துப் பேசுவார்.
முன்னதாக, நியூயார்க்கிலுள்ள கென்னடி சர்வதேச விமானநிலையத்தில் வியாழக்கிழமை வந்து சேர்ந்த பிரதமர் வாஜ்பாய் அங்கிருந்து நேராக மான்ஹட்டன்பகுதியிலுள்ள வால்டுரோப் அஸ்டோரியா ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஹோட்டலில் உள்ள 21 வது மாடி அறை முழுவதும் வாஜ்பாய்க்காகவும், அவருடன் சென்றுள்ள உயர்அதிகாரிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்குவாஜ்பாய் சென்றதும் அவருக்கு இந்தியத் தூதர் நரேஷ் குப்தா வரவேற்பளித்தார்.ஐ.ஏ.என்.எஸ்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications