பாரத் சஞ்சார் நிகம் என்று பெயர் மாறுகிறது தொலைத்தொடர்பு சேவைத் துறை
டெல்லி:
மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடர்பு சேவைத் துறை, தனிநிறுவனமாக்கப்படவுள்ளது. பிரதமர் வாஜ்பாய் தலைமையில் வியாழக்கிழமைநடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
தொலைத் தொடர்புத் துறையில் தனியார்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அம் முடிவின் முதல் கட்டமாக தொலைத் தொடர்பு சேவைத் துறை தனிநிறுவனமாக்கப்பட்டுகிறது. புதிய நிறுவனத்துக்கு பாரத் சஞ்சார் நிகம் என்றுபெயரிடப்படவுள்ளது.
இப் புதிய நிறுவனத்தின் மொத்த மூலதனம் ரூ. 10 ஆயிரம் கோடியாகும். இதில்ஆரம்ப முதலீடாக மத்திய அரசு ரூ. 5 ஆயிரம் கோடியை ஒதுக்கும். இப் புதியநிறுவனம் அக்டோபர் 1-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.
தொலைத் தொடர்புத் துறையை தனியார்மயமாக்குவதற்கு அதன் ஊழியர்கள்கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதையடுத்து அத் துறையில் சில முக்கியமாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டது.
இதையடுத்து தொலைத் தொடர்பு சேவைத் துறை (டி.டி.எஸ்.) என்று புதிய துறையைமத்திய அரசு உருவாக்கியது. இந்த டி.டி.எஸ். துறையை மத்திய அரசு இப்போதுநிறுவனமாக்கியுள்ளது என்று மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
தொலைத் தொடர்பு சேவைத் துறை தனி நிறுவனமாக்கப்பட்டாலும், ஊழியர்களின்நலன் பாதுகாக்கப்படும். இது தொடர்பாக ஊழியர்கள் சங்கங்களுடன் மத்திய அரசுபேச்சு நடத்தி வருகிறது.
ஊழியர்களின் கோரிக்கையான நிதி ஆதாரம், ஓய்வூதியம், பணி பாதுகாப்புஆகியவை பற்றி அமைச்சர்கள் குழு விவாதித்து வருகிறது என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications