வன்னியர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்
சென்னை:
வன்னிய சமூகத்தினர் விழிப்புணர்வு பெற்றுத் திகழ வேண்டும் என்று ராஜீவ் காங்கிரஸ்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த வாழப்பாடி ராமமூர்த்தி. தீரன், வன்னிய அடிகளார்ஆகியோர் கூறியதாவது:
வன்னியர் சங்க விழிப்புணர்வு மாநாடு வரும் 6-ம் தேதி சென்னையில் நடைபெறஉள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களைக் கொண்ட சமுதாயமாக விளங்கும்வன்னியர் சங்கம் 112 ஆண்டுகளுக்கு முன்பே வன்னியர் குல சத்திரிய மகா சபைஎன்ற பெயரில் தொடங்கி செயல்பட்டு வந்துள்ளது.
1952-ல் இந்த சங்கமே உழைப்பாளர் பொது நலக்கட்சி என்ற பெயரில் தேர்தலில்போட்டியிட்டு 25 எம்.எல்.ஏக்கள்.எம்.பி.க்கள் வெற்றி பெற்றனர்.
அன்றிருந்த அரசியல் கட்டாயத்தின் காரணமாக அக் கட்சி காங்கிரசுடன் இணைந்தது.அதற்குப் பிறகு அக் கட்சியின் எழுச்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது..
1980-ல் சிதறுண்ட வன்னியர் சங்கத்தை, அதை இணைத்த ராமதாசிடமேகொடுக்கப்பட்டது. ராமதாசின் கையில் இச் சங்கம் இருந்த பொழுது 25 பேர்பலியானார்கள். 42 ஆயிரம் கிரிமினல் வழக்குகள் வன்னியர்கள் மீது பதிவுசெய்யப்பட்டன.
இதன் விளைவாக 108 ஜாதிகளுடன் சேர்த்து வன்னியர்களுககு 20 சதவிகித இடஒதுக்கீடுதான் கிடைத்தது. ராமதாஸ் 89-ல் பா.ம.க.வைத் தொடங்கி வன்னியர்சங்கத்திற்கு எதுவும் செய்யவில்லை.
இந்த நிலையில்தான் வன்னியர் சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காக நடக்க இருக்கும்இந்த மாநாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.












Click it and Unblock the Notifications